Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

சாலையில் கிடந்த 30 கோடி வங்கி பணமா? அதிர வைக்கும் சந்தேகங்கள்



சாலையில் சிதறி கிடந்த 30 கோடி பணம் வங்கி பணமா, இல்லை வாக்காளர்களுக்கு கொடுக்க நினைத்த பணமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியிலிருந்து நேற்று மாலை ரூ.30 கோடி பணத்தை 14 பெட்டிகளில் எடுத்துக்கொண்டு, அரியலூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி சிவசுப்ரணியன் வேனில் புறப்பட்டர். அதன் பின்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 6 போலீஸ்சார் வேனில் சென்றார்கள்.

அந்த வேன், முசிறி டூ திருச்சி சாலையில் உள்ள அய்யம்பாளையம் அருகே, அகிலா பேட்டையில் வந்து கொண்டிருந்த போது,  குடிபோதையில் ஒருவர் சாலையின் குறுக்கே வந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. அதில் ஏழு பண பெட்டிகள் மட்டும் உடைந்து கிடந்ததன. தகவல் தெரிந்ததும், ஆர்.டி.ஒ.மற்றும் தாசில்தார்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த செய்தி பரவ திமுக, மதிமுக கட்சிக்காரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இந்த பணம் எங்கிருந்து வந்தது, எங்கு போகிறது என்று முழுமையாக விசாரித்து சொல்ல வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்த பிறகு 30  கோடி பணத்தை தாசில்தார் ஆபிஸ்க்கு கொண்டு சென்றனர். அங்கு முழுமையாக விசாரித்து, அது எஸ்.பி.ஐ வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியது பணம்தான் என தகவல் அளித்து அனுப்பி வைத்தார்கள்.

விபத்து நடந்த சாலையில் 30 கோடி ரூபாய் சிக்கியிருப்பது எங்களுக்கு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் திமுகவினர்.

"இரண்டு நாட்களுக்கு முன்புதான் கரூர் சேர்ந்த அன்புநாதன் வீடுகளில் 4.75 கோடி பணம் சிக்கியுள்ளது. கரூரை அடுத்த ஊர் முசிறி. இங்கு 30 கோடி பணம் சிதறியிருப்பது எங்களுக்கு சின்ன சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் காசுக்காக எதையும் மறைக்க கூடியவர்கள் . இதை தேர்தல் ஆணையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.