நாட்டில் நிலவுகிற லஞ்ச ஊழல் நிலவரம் பற்றி பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு, சி.பி.ஐ. இயக்குனர் அனில் சின்காவை அழைத்து பேசியது.
அப்போது அந்த குழுவிடம் அவர், “மத்திய அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் 2,411 பேர் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது 87 சதவீதம் அதிகம்” என தெரிவித்தார்.
இதில் சிறிய விவகாரங்களில் விசாரணை நடத்த 6 மாதங்களும், பெரிய விவகாரங்களில் 1 வருடம் வரையிலும் எடுத்துக்கொள்வதாக அவர் கூறினார்.
சில வழக்குகளில் ஒரு வருடத்தைக் கடந்தும் விசாரணை நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் 29-ந் தேதி நிலவரப்படி, சி.பி.ஐ. விசாரணையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,200 ஆகும். இவற்றில் 31 வழக்குகள் மட்டும், 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கின்றனவாம்.
இந்த தகவல்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.