தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும், தேர்தல் முடிவுகளை தொடர்ந்து புதிய அரசு அமைவதற்கும் இடையில் இருப்பது அதிக பட்சமாக இரண்டு வாரங்கள்தான்.
இந்நிலையில் இலவசங்களை அள்ளி விட்டு மக்களின் இதயங்களை கவரலாமா, நல்லதொரு பாதுகாப்பான அரசை அமைத்துக் கொடுப்பதாகச் சொல்லிக் கவரலாமா, வெறும் வார்த்தை ஜாலங்களாலும், சினிமா மாயையாலும் கவரலாமா, ஜாதி, இனம், கலாச்சாரம், மதம் போன்றவைகளை கையிலெடுத்து மக்களை கவர அல்லது வீழ்த்த முயற்சிக்கலாமா... என இப்படி ஆயிரம் 'லாமா' க்களுடன் களம் இறங்கி உள்ளன தமிழக அரசியல் கட்சிகள்.
இதில் திமுக, ம.ந.கூட்டணி, பா.ம.க, பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற ரேசில் இருக்கும் அத்தனை பிரதான கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டன.
இலவசங்களை அறவே எதிர்ப்பதாகக் கூறும் பா.ம.க.வும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இலவசத்தை கை விடவில்லை.
" அனைவருக்கும் இலவசக் கல்வி, மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகள், பேனா முதல் இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டிகள், ‘ஐபேட்’ வரை அனைத்தும் இலவசம்" என்றிருக்கிறது, பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், " தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். சிறு, குறு விவசாயத் தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலையுடன் பொங்கல் பரிசு ரூ.500 ரொக்கமாக வழங்கப்படும்.
கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் இணையதள வசதி. சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் மானியம். ஏழைகளுக்கு உணவு வழங்க அறிஞர் அண்ணா உணவகம். வசதியற்றவர்களுக்கு அரசு செலவில் கைபேசிகள் இலவசம்" என்று சொல்லப்பட்டுள்ளது.
மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில்," விவசாயிகள், நெசவாளர்களின் கடன்கள் தள்ளுபடி, மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் தள்ளுபடி, முழு மதுவிலக்கு , மாணவர்களுக்கு உயர்கல்வி வரை இலவசக் கல்வி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாள்தோறும் அரை லிட்டர் பால் இலவசம்" என்று சொல்லப் பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் அறிக்கை, பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளதோடு, தமிழ்நாட்டில் முன்னர் ஹிட் அடித்த தாலிக்கு தங்கம் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனும், வட்டியும் முழுமையாகத் தள்ளுபடி , பூரண மதுவிலக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் அரசு குடிநீர் திட்டத்தின்படி தினசரி ஒரு குடும்பத்திற்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசம் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள தேசிய, மாநிலக் கட்சிகள் அனைத்துமே ஏறக்குறைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டன. ஆளுங் கட்சியான அதிமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமே இன்னமும் எதிர்பார்க்கப்படுகிற இடத்தில் உள்ளது.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,"ஊழல் ஒழிப்பு , பூரண மதுவிலக்கு உள்ளிட்ட 55 திட்டங்கள் மட்டுமே அறிவித்துள்ளனர். எந்த இலவசமும் இல்லாமல் அறிக்கையை முடித்திருக்கிறார்கள்.
இந்த தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிக்காத ஒரே கட்சி காங்கிரஸ்தான்...

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.