Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

தூங்கி எழுவதற்குள் இப்படி கிளப்பிட்டாங்களே'- பெண் தலைவரை அதிர வைத்த வதந்தி!


காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து வந்தபோது, அவரது தலைமையை ஏற்று முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமானும் தமாகாவில் இணைந்தார். தற்போது திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக இவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜனதா ஆகிய கட்சிகளுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், திடீரென தேமுதிக- மக்கள் நலக்கூட்டணியில் ஜி.கே.வாசன் கூட்டணி சேர்ந்தார். இதனால் மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோர் கட்சி தாவ இருப்பதாக தகவல் வெளியானது.

இதில் பீட்டர் அல்போன்ஸ்,  கூட்டணி தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். ஆனால், எஸ்.ஆர்.பி, தான் அதிமுகவில் சேர இருப்பதாக வந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று மறுத்தார்.

இந்த நிலையில், சாருபாலா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக நேற்று தகவல் பரவியது. இந்த தகவல் சாருபாலாவுக்கும் சென்றது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர், "என்னுடைய வளர்ச்சியை பிடிக்காத உள்ளூர்காரர்கள் யாரோ, இப்படி வதந்தியை கிளப்பியுள்ளனர். நான் தமாகாவில்தான் இருக்கிறேன். உடல் நிலை சரியில்லாததால் மாத்திரை சாப்பிட்டு தூங்கி விட்டேன். அதற்குள் இப்படி கிளப்பி விட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.