Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

அந்தரங்க படத்தை வாட்ஸ்அப்பில் வெளியிடுவதாக மிரட்டல்: காதலன் மீது மாணவி பரபரப்பு புகார்


காதலித்து ஏமாற்றியதுடன் அந்தரங்க படத்தை வாட்ஸ்அப்பில் வெளியிடுவதாக காதலன் மீது கல்லூரி மாணவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.  போரூரை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் லதா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வரும் பரத் என்ற  வாலிபருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. 3 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். பின்னர், கணவன் மனைவியாக  வாழ்ந்துள்ளனர். மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சியை பரத் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், திருமணத்திற்கு பரத் திடீரென மறுத்துள்ளார். மேலும், திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினால் செல்போனில் உள்ள படத்தை வாட்ஸ்அப்  மூலம் மற்றவர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, பரத் தனது நண்பர்கள் மூலமும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே,  காதலித்து மோசடி செய்த பரத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லதா கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கண்ணீர் வடித்தார். தொடர்ந்து  கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.    

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.