Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

ஜெயலலிதா இப்படிதான் நடப்பார்... நடித்து காட்டிய விஜயகாந்த்!


ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் என்று நடித்து காட்டிய விஜயகாந்த், இவரை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? என தேர்தல் பிரசார கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ''கொள்ளையடிப்பதில் அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இத்தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்" என்றார்.




மேலும், மேடைகளில் ஜெயலலிதா இப்படி தான் நடப்பார், பேசுவார் என்று விஜயகாந்த் நடித்துக்காட்டினார். அதன்பின் மீண்டும் தனது பேச்சை தொடங்கிய விஜயகாந்த், ''ஜெயலலிதா இப்படிதான் 2 ஸ்டெப் தான் நடப்பார், உடனே கையை காட்டிவிட்டு போய் உட்கார்ந்துவிடுவார். நின்னாதானே முடியும். இவர்களை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? ஆனால், உங்களுக்காக நான். மக்களுக்காக நான் என்று சொல்வார். ஏன்னா, அது எல்லா சொத்தையும் கொள்ளை அடிச்சுட்டுபோறதுக்குதான்.


அதேபோல், எல்லா பொய்யும் சொல்றவர்தான் பெரியவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி. கலைஞருக்கு ஜெயலலிதாவை பிடிக்காது. ஜெயலலிதாவுக்கு கலைஞரை பிடிக்காது. ஆனால் இருவருக்கும் விஜயகாந்த், என்னை பிடிக்காது. மு.க.ஸ்டாலின், உன்  எண்ணமே உன்னை அழித்துவிடும். உன்னுடைய கெட்ட நோக்கம், கெட்ட வார்த்தைகளே உன்னை அழித்துவிடும். பிள்ளைப்பிடிப்பவர்களை எல்லாம் உங்கள் கட்சியில் சேர்த்து வைத்துள்ளீர்களே அது உங்களுக்கு புரியவில்லை.

நான் என்னென்னமோ சொல்லலாம் ஆனால் இந்த நேரத்தில் வேண்டாம் இல்லையா?" என்று மேடையில் அமர்ந்திருப்பவர்களை பார்த்து கேட்டுவிட்டு, அ.தி.மு.க., தி.மு.க.வை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் அதனால், வரும் தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. அடங்கிய கூட்டணிக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.