தூங்குவது யாருக்குதான் பிடிக்காது? அலாரம் அடித்தாலும் அதனை அணைத்து வைத்து தூங்குபவர்கள் தான் அதிகம். செல்போனில் அலாரம் வைத்து விட்டு, அது காலையில் அடிக்கும்போது அதனை ஐந்து நிமிடம் கழித்து அடிக்கும்படி வைத்து விட்டு தூங்குவதுதான் பலரது முதல் பணி. அப்படி தூங்குவதனால் அன்றைய தினம் எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். கல்லூரி அல்லது வேலைக்கு செல்பவர்கள் தினமும் திட்டு வாங்கிதான் அந்த தினத்தை துவங்குவார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்காகவே புதிதாக வந்துள்ளது எலெக்ட்ரிக் ஷாக் அடிக்கும் பேண்ட் ( Band). நம்மில் பலருக்கு கையில் பேண்ட் அணிவது பிடிக்கும். நாம் எத்தனை மணிக்கு எழும்ப வேண்டுமோ அதனை நமது செல்போனில் இருக்கும் செயலியில் குறித்து வைக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் நமது கையில் இருக்கு பேண்ட், முதலில் அதிர்வை ஏற்படுத்தும். அதில் நமது தூக்கம் கலையவில்லை என்றால் அடுத்ததாக சாதாரண அலாரம் போன்று சத்தமிடும். அதிலும் நாம் தூங்கிக்கொண்டே இருந்தால் இவை இரண்டும் ஒரு சேர நடக்கும்.
இவற்றிற்கெல்லாம் நமது தூக்கம் கலையவில்லையெனில், ஒரு சிறிய அளவு ஷாக் நமது பேண்ட் மூலமாக நமக்கு அளிக்கப்படும். இதில் நமது தூக்கம் கட்டாயம் கலைந்து விடும். இதில் இருக்கும் ஷாக்கின் அளவு மிக குறைந்த அளவில்தான் உள்ளதாகவும், இது நமது மூளையை பழக்கும் முறைதான் என்றும், இதில் எந்தவிதமான ஆபத்தும் இல்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை முதலில் சோதனைக்காக பயன்படுத்திய ஒருவர் கூறுகையில், “இது மிகவும் நன்றாக வேலை செய்கிறது. முதல் நாள் மட்டும்தான் ஷாக் அடித்தது. அடுத்த அடுத்த நாட்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு இரண்டு நிமிடங்கள் முன்னாலே எழுந்து அலாரத்தை அணைத்து விட்டேன்” என்றார்.
தற்போது மூன்று நிறங்களில் இந்த பேண்ட் விற்பனைக்கு வருகின்றது. இந்த பேண்ட்டில் ஒரு சிறிய பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். இதனை செல்போனில் இருக்கும் செயலி மூலமாக இயக்கலாம். ஷாக் தேவை இல்லையென்றல் அதனை அணைத்து விடலாம். வெறும் அதிர்வுகள் மூலமாக நம்மை எழுப்ப முயற்சிக்கும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.