Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2016

அதிகாலையிலேயே டாஸ்மாக் திறப்பு புகார் கொடுத்த வாலிபரை மிரட்டும் போலீஸ்காரர்


திருப்போரூர் அடுத்துள்ள கொட்டமேடு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் என்ற வாலிபர், தனது பகுதியில் அதிகாலையிலேயே டாஸ்மாக் பார் திறந்து விற்பனை செய்யப்படுவதாக திருப்போரூர் காவல் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் கூறினார். அதில் (இவ்வாறு விற்பதற்கு காவல் துறையிடம் அனுமதி பெற்றுள்ளாரா’’ என்று கேள்வி எழுப்புகிறார். எங்கே வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள்ளுங்கள், அவரிடம் பேசிய காவலர் உன் பெயர் என்ன, நேரடியாக ஸ்டேஷனுக்கு வரமுடியுமா, அரசாங்கத்திடம் போய் கேள், என்று கேட்டு மிரட்டுகிறார். நாங்கள்தான் வரவேண்டுமா என்றும் கிராமத்திற்கு போலீஸ் வர மாட்டீர்களா என்றும் அந்த இளைஞர் கேள்வி எழுப்புகிறார். இத்தனை நாளாக இல்லாத அக்கறை இப்போது ஏன் என்று கேட்டு போலீஸ் சொல்கிறார்.

அரசாங்கமே கடை நடத்த சொல்லி இருக்கு. அவர்களிடம் போய் கேள், இல்லையென்றால் நேரடியாக ஸ்டேஷனுக்கு வா என்று சொல்லி போனை போலீஸ் வைத்து விடுகிறார். இந்த உரையாடல் இப்பகுதியில் வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது.. இதுபோன்று கிராமப்புற இளைஞர்கள் கேள்வி எழுப்பினால் எழுத்து மூலம் புகார் கொடு என்று கூறி போலீசார் மிரட்டுவது, தொடர் கதையாக வருகிறது. இதனால் தவறுகளை தட்டிக்கேட்க ஆளே இல்லாத நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.