பத்தாண்டுகளுக்குப் பின் அந்தப் பகுதியில் மழை பெய்தது. மெதுவாகத் துவங்கிய மழை விட்டுவிட்டுப் பெய்தது. தரை நன்றாக நனைந்தது. சில நாட்களுக்குப் பின் வேகமாகப் பெய்தது. வேகமாக ஓடிய நீர் சாலைகள் சந்து பொந்துகளைச் சுத்தமாக்கியது. அழுக்குகளை அடித்து இழுத்துச் சென்றது.
குட்டைகள் நிரம்பி வழிந்தன. குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், குளத்தில் நீர் தேங்கத் தொடங்கியது. பத்தாண்டுகளுக்குப் பின் குளம் நிரம்பியதைக் கண்ட கிராமவாசிகள் மகிழ்ந்தனர். உழவர்கள் தங்கள் பணிகளைத் துவங்கினர்.
கிராமத்துக் குழந்தைகளுக்கு கொண்டாட்டம். காலையிலும், மாலையிலும் சிறுவர், சிறுமியர் குளத்து நீரில் விளையாடி மகிழ்ந்தனர். நீச்சல் பயிற்சி இல்லாத சிறுவர்கள் குளக்கரையில் அமர்ந்து மகிழ்வாய் வேடிக்கை பார்த்தனர்.
அன்று விடுமுறைதான். தங்கமணி குளத்துக்கு வந்தான். குளக்கரையின் ஓரமாய் நின்றான். அவனுக்குத் தண்ணீர் என்றால் பயம்; சிறுவர்கள் நீந்துவதைக் காண்பதில் மகிழ்ச்சி. சில மணித்துளிகள் வேடிக்கை பார்த்தான்.
தங்கமணியின் தந்தை குளக்கரையில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த தங்கமணி அவரிடம் தன் ஆசையை வெளியிட்டான்.
""அப்பா, எனக்கும் நீச்சல் கற்றுத் தாருங்கள்,'' என்று கேட்டான்.
""மீன் குஞ்சுக்கு யாராவது நீந்தக் கற்றுத் தரவேண்டுமா? குளக்கரையில் ஏன் நேரத்தை வீணாக்குகிறாய்? போ, போய் நீரில் விழு. நீரில் இறங்காமல் எவரும் நீச்சல் கற்க முடியாது!'' இதைச் சொல்லிவிட்டு, அவர் நடக்கத் தொடங்கினார்.
தங்கமணி அவர் பின்னால் சில அடிகள் நடந்தான்.
""அப்பா...'' என்று தொடங்கினான். அவனை மேலும், பேசவிடாமல் அவன் அப்பா தடுத்தார்.
""தங்கமணி, ஓடிப்போய் தண்ணீரில் விழு. குளத்தின் அடிமட்டத்துக்குப் போய்விடுவாய். மூச்சை அடக்கு; வாயை மூடிக்கொள்; தண்ணீரை குடிக்காதே. கைகளால் நீரை தரை நோக்கி அழுத்து; உடல் தண்ணீரின் மேல் மட்டத்துக்கு வந்துவிடும். பின்னர் கால்களை உதை. கைகளைத் துடுப்புபோல் பயன்படுத்தி விரைந்து செயல்படு. உன்னுடல் கரை நோக்கி வரும்,'' இதைக் கூறியவர், மகனின் பதிலை எதிர்பார்க்காதவராய் வயலை நோக்கி விரைந்து நடந்து சென்றார்.
தங்கமணிக்கு ஒன்றும் புரியவில்லை. தலையில் கைவைத்து குளக்கரையில் அமர்ந்தான். அவன் வயதை ஒத்த ஒரு சில சிறுவர்கள் அனைவரும் நீந்திக் கொண்டிருந்தனர். ஆவல் ஒரு பக்கம், பயம் ஒரு பக்கம்; அவன் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தன்னை உணர்ந்தான். நீர் விளையாட்டின் மேல் கொண்ட ஆசை, அவனை வீட்டுக்குச் செல்ல விடவில்லை. பயம் அவனைக் குளத்தில் இறங்கவிடவில்லை.
சில மணித்துளிகள் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தவனை, ஓர் இனிய இசை கவர்ந்து இழுத்தது. தலையைத் தூக்கி மேலே பார்த்தான். சிறிது உயரத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.
"வானம்பாடி என்ற பறவை இதுதானோ? எவ்வளவு இனிமையாகப் பாடுகிறது!'
"நீரில் இறங்கினால்தான் நீச்சல் கற்க முடியும்!' பறவையின் பாட்டு அவன் காதுகளில் இப்படித்தான் கேட்டது. அவனுக்கு வியப்பாக இருந்தது.
""தங்கமணி நான் வானம்பாடி அல்ல; ஆனால், நான் பாடும் பறவை (ஹம்மிங் பேர்டு) என்றே மக்களால் அழைக்கப்படுகிறேன். எனது பாட்டு உனக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று கேட்டது.
"இது என்ன பாட்டு பாடியது? நீரில் இறங்கினால் தான் நீச்சல் கற்க முடியும். இப்படித்தானே பாடியது. இது என்ன? ஓர் அழகிய கவிதை என்று இதைச் சொல்ல முடியுமா? இதன் பாட்டு எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இதன் இசை மிகவும் இனிமையாக இருக்கிறதே!' தங்கமணி மீண்டும் தலையைத் தூக்கிப் பார்த்தான்.
"இது என்ன ஆச்சரியம்! இந்தப் பறவை பின்னோக்கிப் பறக்கிறது! இதன் வால் பகுதி முன்னால் செல்கிறது!' அவன் சிந்தனை வியப்பால் நிறைந்தது.
""தங்கமணி! நான் பாடும் பறவை. நான் பின்னோக்கித் தான் பறப்பேன். எல்லை இல்லாத வானமே என்னுலகம். பின்னோக்கிப் பறப்பதால், மலை முகடுகளில் முட்டி மோதி விடுவேன் என்ற பயம் எனக்கு இல்லை. நீயும் என்னுடன் வா; நாமிருவரும் இணைந்து பறக்கலாம் வா!'' என்றது.
பாடும் பறவையின் அழைப்பை தங்கமணி ஏற்றுக் கொண்டான்.
பறவையும், தங்கமணியும் ஒன்றாக இணைந்து பறந்தனர். அந்த அனுபவம் அவனுக்கு மிகுதியான மகிழ்ச்சியை அளித்தது. இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்க வேண்டும் என்ற அவன் ஏக்கப் பெருமூச்சு விட்டான்.
உச்சி வானத்தில் பறந்தவன் கீழே பார்த்தான். குளம் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அங்கே இன்னும் சில சிறுவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர். அவர்களை உற்றுப் பார்த்தான். அவர்களில் ஒருவன் மல்லார்ந்து படுத்த படி நீந்திக் கொண்டிருந்தான். அவன் முகம் வான் நோக்கி இருந்தது. தங்கமணி வியப்பின் எல்லைக்கே சென்று விட்டான். இவனால் எப்படி மல்லாந்து நீந்த முடிகிறது?
""தங்கமணி இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நீரில் மல்லாந்து படுத்துக் கொண்டு கைகளை துடுப்பு போல் பயன்படுத்திச் செயல் பட்டால் உடல் தானாக முன்னே செல்லும். என்னுடன் பறந்து கொண்டிருக்கும் உனக்கு இதுவும் தெரியாதா?இன்னும் நான் பின்னோக்கித் தானே பறந்து கொண்டிருக்கிறேன்!''
அவன் மீண்டும் உற்றுப் பார்த்துக் கவனித்தான். பறவை பின்னோக்கித்தான் சென்று கொண்டிருந்தது.
""மீண்டும் என்மேல் சந்தேகமா? சந்தேகத்தை விட்டுவிடு. நம்பிக்கை கொள். நான் அடையும் மகிழ்ச்சியை நீயும் பெற வேண்டும். அல்லவா? மல்லாந்து நீந்தும் சிறுவனின் மகிழ்ச்சியைப் பார். பயத்தை விட்டுவிடு. முயற்சி செய். மீண்டும் பறவை பேசியது.
தங்கமணியின் நம்பிக்கை உறுதியாகியது. அச்சம் அவனை விட்டு விலகி ஓடியது. வானத்திலிருந்து நேராகக் குளத்தில் குதித்தான்.
இதுவரை குளக்கரையில் பயத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் தங்கமணி. அவன் திடீர் என நீரில் குதித்ததைப் பார்த்து, எல்லா சிறுவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
சுமார் பத்தடி ஆழமுள்ள நடுப்பகுதியில் அவன் விழுந்தான். அவன் கால் தரையை எட்டியது. கால்களை தரையில் உதைத்து, கைகளால் நீரை தரை நோக்கி அழுத்தினான். மூச்சை அடக்கிக் கொண்டான். அவனுடல் நீரில் மேல் மட்டத்துக்கு வந்தது. அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது. இப்போது அவன் உடல் மீண்டும் நீரில் மூழ்கியது. மீண்டும் காலை உதைத்தான். கைகளைப் பயன்படுத்தி நீரை அழுத்தினான்.
திரும்பவும் மேலே வந்தான். தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. கால்களை உதைத்தான். கைகளைத் துடுப்பாய் பயன்படுத்தி நீரை இழுத்தான். அவன் உடல் குளத்தின் கரை நோக்கி நகர்ந்தது. அவனுக்கு மிகுந்த வியப்பு! கரையேறினான்.
தந்தையை மனதில் நினைத்து வணங்கினான். வானத்தை அண்ணாந்து பார்த்தான். அந்த பாடும் பறவை பறந்தோடிச் சென்று மறைந்தது. பாடும் பறவையை அவன் பார்த்தது உண்மைதான். ஆனால், பறவையுடன் அவன் பேசியதெல்லாம் கற்பனை. அவன் பயம் விலகியது. நீரில் குதித்து நீந்தக் கற்றுக் கொண்டான்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.