Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

ஆசைவார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை கடத்தி திருமணம் செய்தவர் கைது மீட்கப்பட்ட பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு


ஆசை வார்த்தையை கூறி பிளஸ்–2 மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக பெட்ரோல் பங்க் ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பிளஸ்–2 மாணவியுடன் காதல்
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் வாணுவம்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது23). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். மீனம்பாக்கத்தில் இளநீர் கடை நடத்தி வருபவர் மல்லிகா. இவரது 17–வயது மகள் சீதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).

பிளஸ்–2 மாணவியான சீதாவுக்கு மீனம்பாக்கத்திற்கு அடிக்கடி வரும் விஜயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 1–ந் தேதி பிளஸ்–2 தேர்வு முடிந்ததும், தேர்வு எழுத சென்ற சீதா வீடு திரும்பவில்லை. இதுபற்றி மகளை காணவில்லை என்று கூறி அவரது தாயார் மல்லிகா மீனம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் கீழ்கட்டளையில் இருந்த சீதா–விஜயகுமாரை போலீசார் பிடித்தனர்.

ஆசைவார்த்தை கூறி திருமணம்
விசாரணையில், மைனர் பெண்ணான சீதாவிடம் விஜயகுமார் தான் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

போலீஸ் நிலையத்தில் இருந்த சீதா தனது பெற்றோருடன் செல்வதாக கூறினார். அதைத்தொடர்ந்து அவருக்கு போலீசார் அறிவுரை கூறி சீதாவை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

மேலும் மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக விஜயகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.