கொள்ளக்குடி என்னும் ஊரில் மகா கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் தன் ஒரே மகளுக்கு சிக்கனமாக மணமகனைத் தேடி, ஒவ்வோர் ஊராக அலைந்தான். சிக்கனமாக வாழ்க்கை நடத்தக் கூடிய யாருமே அவனுக்குக் கிடைக்கவில்லை. எல்லாருமே ஊதாரிகளாகவே தெரிந்தனர். இதற்காக அவன் முயற்சியை விட வில்லை. பல இடங் களில் அலைந்தான்.
எங்கெங்கோ அலைந்து, ஓர் ஊருக்குள் நுழைந்தான். நண்பன் ஒருவன் அங்கே கடை வைத்திருக்கிறார் என்பது அறிந்து அங்கு சென்றான்.
கஞ்சனின் நண்பனும் அவரை வரவேற்றார்.
""தங்களுக்கு என்னால் ஏதேனும் உதவி ஆக வேண்டுமா?'' என்று கேட்டார்.
கஞ்சனும் தாம் வந்த வேலையைச் சொல்லி, ""மிகவும் சிக்கனமானவனாக இருக்க வேண்டும். நம் இனத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும். அப்படி யாரேனும் இருந்தால், சொல்லுங்கள் என் மகளுக்கு மாப்பிள்ளை தேடி என் கால் கள் தேய்ந்து விட்டன,'' என்றான்.
""உங்கள் கவலை இன்றோடு தீர்ந்தது. எதிரில் மளிகைக் கடையில் அமர்ந்திருக் கிறான் பாருங்கள் ஒரு பையன். அவன்தான் இந்த ஊரிலேயே மிகவும் சிக்கனமான பையன். உங்கள் மகளுக்கு ஏற்றவன். இங்கேயே இருந்து அவன் நடவடிக்கை களை கவனித்தால் எப்படிப்பட்ட சிக்கன மானவன் என்பது உங்களுக்கே புரியும்,'' என்றார் கஞ்சனின் நண்பர்.
கஞ்சனும் அங்கேயே அமர்ந்து எதிர் கடையை பார்த்துக் கொண்டிருந்தான். யாரோ ஒருவர் வந்து அந்தக் கடையில் ஏதோ பொருளை வாங்கிச் சென்றார்.
உடனே அந்த இளைஞன் ஒரு பாத்திரத்தில் தன் கைகளைக் கழுவினான். பிறகு அந்தப் பாத்திரத்தை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்தான்.
இதை பார்த்த கஞ்சனுக்கு ஒன்றும் புரியவில்லை.
""அந்த இளைஞன் ஏன் கையை கழுவினான்? பிறகு நீரைக் கீழே கொட்டா மல் ஏன் பாதுகாப்பாக வைக்கிறான்,'' என்று கேட்டான் கஞ்சன்.
""கடைக்கு வந்த யாரோ மிளகு வாங்கி இருக்கிறார்கள். மிளகை அவன் தன் கையால் எடுத்து போட்டிருக்கிறான். மிளகு வாசனை வீணாகக் கூடாது என்பதற்காக கைகளைக் கழுவி இருக்கிறான். அந்த நீரை வீட்டுக்கு அனுப்பி விடுவான். அதில் இன்று அவன் வீட்டில் ரசம் வைத்து விடுவர். இப்படிப்பட்ட சிக்கனமான பையனை எங்காவது பார்த்திருக் கிறீர்களா?'' என்று பெருமையுடன் கூறினார் கஞ்சனின் நண்பர்
கஞ்சனின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.
""சிக்கனமான பையனாக இருந்தால் என் மகளுக்குப் பாருங்கள் என்று சொன்னேன். நான் மட்டும் கொஞ்சம் ஏமாந்திருந்தால், இந்த ஊதாரிப் பையனை என் தலையில் கட்டியிருப்பீர்கள்,'' என்று கோபத்துடன் கத்தினான்.
கஞ்சனின் நண்பருக்கு, கஞ்சனின் கோபம் புரியவில்லை.
""இந்தப் பையனை விட எப்படி சிக்கனமாக இருப்பது சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.
""மிளகு எடுத்துப் போட்ட கையை, முழுவதும் ஒரே பாத்திரத்தில் கழுவி ஒரே நாளில் ரசம் வைத்து சாப்பிட்டால் சிக்கனம் ஆகுமா? நானாக இருந்தால் ஒவ்வொரு விரலையும் ஒரு பாத்திரத்தில் கழுவுவேன். உள்ளங்கையை ஒரு பாத்திரத்தில் கழுவுவேன். ஆறு நாட்கள் ரசம் வைத்து சாப்பிடுவேன். இனிமேலாவது சிக்கனத்தை கற்றுக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான் கஞ்சன்.
""அடப்பாவி. இப்படியும் ஒரு கஞ்சனா?' என்று நொந்து போனார் கஞ்சனின் நண்பர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.