Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2016

ஜெயலலிதா ஆட்சியை நிரந்தரமாக அகற்றிட பூமி பூஜை போட வந்துள்ளேன்! -மு.க.ஸ்டாலின்


தன்னை மீண்டும் தி.மு.க.வில் இனைத்துக்கொள்ள சென்னையில் அழகிரி முகாமிட்டிருந்த வேளையில், மதுரையில் முகாமிட்டு ஒரே நாளில் பத்து தொகுதிகளில் பிரசாரத்தை உற்சாகமாக துவாக்கி உள்ளார் மு.க.ஸ்டாலின்.

நேற்று மாலை மூன்று மணிக்கு துவங்கி மதுரை கிழக்கு, மேலூர், மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி என்று சரியாக திட்டமிட்டு இரவு பத்து மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தை ஸ்டாலின் முடித்தார்.

எல்லா பாயிண்டுகளிலும் ஒரே மாதிரியான பேச்சு என்றாலும், அந்தந்த பகுதி பிரச்னைகளை கொஞ்சம் சேர்த்துக் கொண்டார். மதுரை தி.மு.க. வேட்பாளர்களில் கிழக்கு தொகுதி மூர்த்தியும், மேலூர் ரகுபதியும் பெரிய அளவில் கூட்டத்தை கூட்டியிருந்தனர். கூட்டத்தை வைத்து வேட்பாளரின் செல்வாக்கை தெரிந்துகொள்ள முடிந்தது. உக்கிராமான வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமப்புற மக்களை தி.மு.க.வினர் அழைத்து வந்திருந்தனர்.



பிரசார கூட்டங்களில் ஸ்டாலின் பேசும்போது, ''கடனில் மூழ்கிய தமிழகத்தை மீட்க கலைஞா் தலைமையில் ஆட்சி அமைப்போம். ஜெயலலிதா ஆட்சி என்ற வில்லனை அகற்றும்   கதாநாயகன் தி.மு.க.வின் தோ்தல் அறிக்கைதான். வருகின்ற மே ந்ல் ஜெயலலிதா ஆட்சியை நிரந்தரமாக அகற்றிட இங்கே பூமி பூஜை போட வந்துள்ளேன். கடந்த மே மாதம் இதே இடத்தில் தான் நீதி கேட்கும் பேரணியை நடத்தினேன். அதே மண்ணில் தான் தற்போது நீதி கேட்டு வந்துள்ளேன்.

தி.மு.க.வின் தோ்தல் அறிக்கை ஜெயலலிதா ஆட்சி என்ற வில்லனை விரட்டுகிற சூப்பா் ஹீரோவாக இருக்கிறது. 501 உறுதிமொழிகள் இந்த தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. தாய்மார்கள் மகிழ்ச்சி அடைகிற வகையில் மதுவிலக்கு, ஊழலை ஒழிக்கின்ற லோக் ஆயுக்தா, சேவை உரிமைச் சட்டம், மாணவா்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி என்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கலைஞா் தயாராக இருக்கிறார்.



ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. மதுரையில் தமிழன்னை சிலை அமைக்கப்படவில்லை, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவில்லை, துணைக்கோள் நகரம் உருவாக்கப்படவில்லை. மொத்தத்தில் தமிழக மக்களுககு பட்டை நாமம் போடுகிற அறிவிப்புகள் மட்டுமே இந்த ஆட்சியிலே இருந்தது.



ஆனால் தி.மு.க. ஆட்சி வருகின்றபோது, இந்நிலை மாற்றப்படும். ஏற்கனவே உறுதி அளித்துள்ளது போலவே வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும். அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் ஆகியவை தடையின்றி நடத்தப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் நான்கு லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ளது. கடனில் மூழ்கும் தமிழகத்தை காப்பாற்ற கலைஞா் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்" என்று பேசினார்.

கோடை வெப்பத்தோடு பிரசார வெப்பமும் தமிழகத்தை தாக்க துவங்கிவிட்டது!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.