Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 7, 2016

துப்புடா!-புதிர் சிறுகதை


பொள்ளாச்சி என்னும் ஊரில் உதயசங்கர் என்ற பெருஞ் செல்வந்தர் இருந்தார். அவருடைய மாளிகையில் நம்பிக்கைக்கு உரிய வேலையாட்கள் நான்கு பேர் இருந்தனர்.
அவர்கள் பல ஆண்டு களாக அங்கே வேலை பார்த்து வந்தனர்.
அந்தச் செல்வந்தரின் விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்று, திடீரென்று காணாமல் போய் விட்டது.
"வெளியே இருந்து வந்து யாரும் திருடி யிருக்க முடியாது. வேலையாட்களில் எவனோ ஒருவன்தான் திருடியிருக்க வேண்டும். எல்லா வேலையாட்களையும் விசாரணை செய்தால் நேர்மையான வேலையாட்கள் வருந்துவார் களே... உண்மையான திருடனையும் கண்டு பிடிக்க வேண்டும். மற்றவர்களும் உள்ளம் வருந்தக்கூடாது. என்ன செய்வது' என்று சிந்தித்தார் உதயசங்கர்.
புகழ் பெற்ற மந்திரவாதி ஒருவரிடம் சென்று, ""நீங்கள்தான் திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு எந்தத் துன்பமும் வரக் கூடாது,'' என்றார்.
""உங்கள் மாளிகையில் மந்திர பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நான் வந்து பூஜை செய்கிறேன். பூஜை முடிந்ததும் திருடன் யார் என்பதைக் காட்டுகிறேன்,'' என்றார் மந்திரவாதி.
அதன்படியே பூஜைக்கு வேண்டிய ஏற்பாடு களை செய்தார் உதயசங்கர்.
மந்திரவாதி வந்தார். பூஜை தொடங்கியது.
""ஓம்! சூ! மந்திரக்காளி,'' என்று மந்திரங் களை உரத்த குரலில் சொன்னார்.
வேலையாட்கள் நால்வரையும் அழைத்தார். பூஜையிலிருந்து அரிசிப் பொரி தட்டை எடுத்தார். அதில் நான்கு வண்ணங்களில் அரிசிப் பொறி இருந்தது.
முதலாமவனிடம் மஞ்சள் நிற பொரியும், இரண்டாமவனிடம் சிவப்பு நிற பொரியும், மூன்றாமவனிடம் வெள்ளை நிற பொரியும், நான்காமவனிடம் பச்சை நிற பொரியும் தரப்பட்டது.
""இது சாதாரண பொரி அல்ல. மந்திரப் பொரி. இதை வாயிலேயே நன்றாக மெல்ல வேண்டும். விழுங்கக் கூடாது. நன்றாக மெல்லப்பட்டதும் இந்த
மந்திரப் பொரி திருடனின் வாயில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். அவனால் வாயைத் திறந்து பேசமுடியாது. திருடாதவர் களைப் பொரி ஒன்றும் செய்யாது. இந்தப் பொரியை நன்றாக மென்றுவிட்டு வெளியே சென்று துப்பிவிட்டு வர வேண்டும்,'' என்றார் மந்திரவாதி.
நடுங்கியபடியே அவர்கள் நால்வரும் பொரியை மென்றனர். வெளியே சென்று துப்பிவிட்டு வந்தனர்.
அவர்களில் ஒருவனைத் திருடன் என்று கண்டு பிடித்துச் சொன்னார் மந்திரவாதி.
அவனும் தான் செய்த திருட்டை ஒப்புக் கொண்டான்.
திருடனை மந்திரவாதி எப்படிக் கண்டுபிடித்திருப்பார் குட்டீஸ்?

புதிருக்கான விடை:
வேலையாட்கள் பொரியைத் துப்பிய இடத்தைப் பார்த்தார் மந்திரவாதி. அவர் களில் ஒருவன் மட்டும் பொரியை மெல்லாமல் அப்படியே துப்பி இருந்தான். எந்த நிறப் பொரி என்பதை வைத்து திருடனைக் கண்டுபிடித்தார்..
ஹையோ!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.