மலையடிவாரத்தில் முயல்கள் எல்லாம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. ஒருநாள் அந்த முயல்கள் எல்லாம் ஒன்று கூடின.
""நண்பர்களே! நாம் நீண்ட நாட்களாக இந்த இடத்தில் வசித்து வருகிறோம்! ஆனால், இப்போது இந்த இடத்தில் நம் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நாம் இனி வாழ்வதற்கான வேறு இடத்தைத் தேர்வு செய்திட வேண்டும். நம்மில் யார் சிறப்பான இடத்தைத் தேர்வு செய்து வருகிறார்களோ அவர்களையே நம் கூட்டத்தின் தலைவராக நியமித்து விட்டு, நான் இப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றிடலாம் என்று நினைக்கிறேன். எனக்கு வயதாகி விட்டது. காதுகள் சரியாகக் கேட்கவில்லை. கண் பார்வையும் சரியாகத் தெரியவில்லை. இதற்கு நீங்கள் எல்லாரும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்,'' என்றது அந்த வயதான தலைவர் முயல்.
தலைவர் முயலின் கருத்தை மற்ற முயல்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டன.
""தலைவரே! உங்கள் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்! தங்களது வயதான நிலையில் நமக்கு இப்போது ஓர் புதிய தலைவர் தேவைதான். வரப்போகும் புதிய தலைவர் புத்திசாலித்தனமாகவும், சாமர்த்தியமாகவும் இருந்திட வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் இந்தப் போட்டியை நடத்துகிறீர்கள். இப்போட்டியில் நாங்கள் எல்லாருமே கலந்து கொண்டு ஒவ்வொருவருக்கும் உள்ள புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறோம்,'' என்றன.
""நல்லது நண்பர்களே! இப்போதே நீங்கள் அனைவரும் உங்களது திறமையைக் காட்டிட புறப்படலாம்,'' என்றது தலைவர் முயல்.
உடனே எல்லா முயல்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
நீண்ட நேரமாக எந்த முயலும் திரும்பி வரவில்லை. தலைவர் முயல் மற்ற முயல்கள் எல்லாம் எப்போது வரும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் வெள்ளை முயல் ஒன்று திரும்பி வந்து தலைவர் முயலைச் சந்தித்தது.
""தலைவரே! சற்று தூரத்தில் நான் ஓர் குளத்தினைக் கண்டேன். அக்குளத்தில் ஏராளமான தண்ணீர் நிரம்பியுள்ளது,'' என்றது.
தலைவர் முயலோ அந்த வெள்ளை முயலை நோக்கியது.
""நண்பனே! குளம் நிறைய தண்ணீர் நிறைந்திருந்தாலும், அது கோடைக் காலத்தில் வற்றிவிடும். மேலும், அந்தக் குளம் இருக்கிற இடத்தினையும் நானறிவேன்! அந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
கிராம மக்கள் எல்லாரும் அந்தக் குளத்தில் தான் குளிக்க வருகின்றனர். எனவே, அவர்களால் எந்த நேரத்திலும் நமக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, நாம் தங்கி வாழ்வதற்கு அந்த இடமானது ஏற்றதல்ல,'' என்றது.
அதனைக் கேட்ட வெள்ளை முயலோ, தலைகுனிந்தபடி நின்றது.
சிறிது நேரத்தில் ஓர் குண்டு முயல் தலைவர் முயல் முன்னால் வந்து நின்றது.
""தலைவரே வணக்கம்! நான் சற்றுத் தொலைவில் உள்ள ஆற்றினைக் கண்டேன். ஆனால், அந்த ஆற்றில் எந்த நேரமும் கலங்கிய நீரே ஓடிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். எனவே, நாம் வாழ அந்த இடம் ஓரளவுக்கு தேர்ச்சிப் பெற்றதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒருவேளை எங்காவது அணைக் கட்டினை திறந்தால், ஆற்றில் கலங்கிய நீர் மாறி புதிய வெள்ளம் நிறைந்தோடும் என்று நினைக்கிறேன். எனவே, நாம் வாழ்ந்திட ஆற்றுப் பகுதியினை நீங்கள் தேர்வு செய்திடுவீர்கள் என்று நம்புகிறேன்,'' என்றது குண்டு முயல்.
""நீ கூறிய ஆற்றுப் பகுதியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தால் அது நாம் வசிக்கும் பகுதிக்கு ஆபத்துதானே! ஆற்றங் கரையில் வசித்திடும் நாம் அந்த ஆற்று வெள்ளத்தினால் இழுத்துச் செல்லப்படலாம். எனவே, அந்த இடமானது நாம் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருக்காது,'' என்றது.
அதனைக் கேட்ட குண்டு முயலும் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தது. அந்நேரத்தில் சற்று உயரமான முயல் தலைவர் முயல் முன்னே வந்து நின்றது.
""தலைவரே! நான் ஓர் மலையடிவாரத்திற்குச் சென்றேன். அந்தப் பகுதியில் எல்லாம் பச்சைப் பசேல் என்று காணப்படுகின்றன. மலையடிவாரத்தினைச் சுற்றிலும் ஆங்காங்கே நீர் நிலைகள் காணப்படுகின்றன. அது நாம் வாழ்வதற்கேற்ற இடம்தான். ஆனால், அந்தப் பகுதியில் ஏராளமான நரிகளும் காணப்படுகின்றன,'' என்றது.
""நீ கூறிய அந்த மலையடிவாரத்தில் நரிகளும் வாழ்வதாகக் கூறுகிறாய். நரிகள் நமக்கு எதிரிகள். அவை நம்மை எப்போதும் வேண்டுமானாலும் தாக்கக் கூடும். எனவே, இந்த இடமானது நாம் வாழ்வதற்கு ஏற்றதல்ல,'' என்றது.
அதனைக் கேட்ட உயரமான முயலும் தலைகுனிந்தபடி நின்றது.
சிறிது நேரத்தில் ஓர் குட்டை முயலானது தலைவர் முயலின் எதிரே வந்து நின்றது.
""தலைவரே வணக்கம்! நான் ஓர் ஏரியைப் பார்த்தேன். அந்த ஏரியானது தண்ணீரில் நிறைந்திருந்தாலும், அதன் கரையோரங்கள் எல்லாம் வெட்ட வெளியாக இருக்கிறது. அந்தப் பகுதியில் புதர்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் நாம் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அது இருக்கும் என்று நான் நம்புகிறேன்,'' என்றது.
தலைவர் முயல் குட்டை முயலை நோக்கியது.
""நண்பனே புதர்கள் இருக்கும் இடம்தான் நமக்குப் பாதுகாப்பு. புதர்கள் இருந்தால் தான் நாம் மறைந்த படி வாழ்ந்திட முடியும். நாம் மறைவான இடத்தில் வாழ்ந்தால் தான் அது நமக்குப் பாதுகாப்பாக அமைந்திடும்,'' என்றது.
அதனைக் கேட்ட குட்டை முயலோ பதில் எதுவும் பேச முடியாமல் அமைதியுடன் நின்றது.
அதனைத் தொடர்ந்து மற்ற முயல்களும் ஆங்காங்கே தாங்கள் கண்ட இடத்தினை எல்லாம் தலைவர் முயலிடம் தெரிவிக்க, அந்த தலைவர் முயலும் பல்வேறு காரணங்களுக்காக அவைகளை எல்லாம் ஒதுக்கிக் கொண்டே வந்தது.
கடைசியாக சிறு முயல் ஒன்று பணிவோடு தலைவர் முயல் முன்னே வந்து நின்றது.
""தலைவரே வணக்கம்! நான் ஏராளமான இடங்களை சுற்றிப் பார்த்து விட்டேன். எந்த இடமும் நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் இல்லை. எனவே, தற்போது நாம் வசித்து வரும் இந்த இடமே நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற இடமாகத் தெரிகிறது. நான் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தபோது, இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த மலையடி வாரப் பகுதி ஆறுகளில் தண்ணீர் வரும் என்று தெரிகிறது. அந்நேரம் தண்ணீரும் நம் தேவைக்கு ஏற்ற வகையில் இருந்திடும் என்று நம்பிடலாம். எனவே, நாம் கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போல் அலைந்திட வேண்டாம்! இப்போது இருக்கும் இடத்திலேயே சிறப்பாக வாழ்ந்திடலாம்!'' என்றது.
அந்தச் சிறு முயலின் பொறுத்தமான பதில் தலைவர் முயலுக்குப் பிடித்து விட்டது.
அது மகிழ்ச்சியோடு சிறு முயலை நோக்கியது.
""நீ உருவத்தில் எல்லாரையும் விட சிறியவனாக இருந்தாலும் மற்றவர்களிடம் இல்லாத, பொது அறிவுத்திறன் உன்னிடம் இருக்கிறது. நீ இப்போது நிலையான முடிவினை என்னிடம் கூறினாய். நீ கூறிய கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். உன் உருவம் சிறிய வடிவம்தான். நீ இன்னும் நன்றாக வளரும் முன்னே, உன்னுடைய அறிவு நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. அது மேலும், மேலும் நன்றாக வளர்ச்சி அடைந்திட உனக்கு புதிய அனுபவங்கள் கிடைத்திடும். இந்த புதிய அனுபவங்கள் உன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்! நீ மற்ற எல்லாரையும் விட சிறியவனாக இருந்தாலும், உன்னையே நான் புதிய தலைவனாக்குகிறேன். இதனை மற்ற நண்பர்களும் ஏற்றுக் கொள்வர் என்று நம்புகிறேன்,'' என்றது.
அந்நேரம் மற்ற முயல்கள் எல்லாரும், ""தலைவரே! திறமையானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பதவி கொடுத்து கவுரவப்படுத்துவீர்கள் என்பதை நாங்களும் அறிவோம். அந்த வகையில் நீங்கள் இந்தச் சிறியவனின் திறமைக்குப் பரிசு கொடுத் திருக்கிறீர். இனி இவர்தான் எங்கள் புதிய தலைவர்,'' என்று மகிழ்ச்சியுடன் கூறின.
""நண்பர்களே! திறமையானவர்கள் எங்கேயிருந்தாலும் அவர்களை ஆதரிப்பது நம் கடமை. அந்த வகையில் நீங்களும் என்னுடைய கருத்தினை ஏற்றுக் கொண்டதற்கு மிகவும் நன்றி!'' என்றது.
குட்டித் தலைவரின் ஆலோசனையின் பேரில் முயல்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.