வெயிலில் வெளியே செல்ல வேண்டியிருந்தால் கூலிங் க்ளாஸ் அணியவும். ஏனெனில் வெயிலில் கண்களில் எற்படும் கூச்சத்தால், கண்களுக்குக் கீழே சுருக்கங்கள் ஏற்படலாம்.
கண்களுக்குக் கீழே உள்ள சருமம் மிகவும் மென்மையானதால் அதை இழுத்து விடுவதோ, தேய்ப்பதோ கூடாது. இப்படி முரட்டுத்தனமான காரியங்கள் செய்தால் சுருக்கங்கள் ஏற்படலாம்.
‘ஃபேஸ்பேக் மற்றும் அஸ்டிரின்ஜென்ட் கண்களைச் சுற்றி போடக் கூடாது. அவை காய்ந்த பின் அந்த இடத்தில் உள்ள தோலை இழுத்து சுருக்கத்தை ஏற்படுத்தும்.
மேக்கப்பை கலைக்கும் போது கண் பகுதியில் மெதுவாக ரிமூவரை பயன்படுத்துங்கள். 10 நொடிகள் கழித்து ஈரமான பஞ்சைக் கொண்டு துடைத் தெடுக்கவும். மேக்கப் கலைக்க / ரிமூவர் பயன்படுத்த சரியான முறை : ஈரப்பஞ்சை கண்களில் மெதுவாக வைத்து கீழிருந்து மேலாக தேய்க்கவும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.