Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 7, 2016

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்


*பாம்பு விஷம், மீன் முட்டை, நத்தை வெளியேற்றும் வழுவழுப்பு, ஒயின்... இவற்றில் எல்லாம் செய்யப்படுகிற ஃபேஷியல் இப்போது ரொம்பவே பிரபலம். அந்த வரிசையில் லேட்டஸ்ட் ஷாம்பெயின் ஃபேஷியல்!பெரிய இடத்து பார்ட்டி, கொண்டாட்டங்கள் என்றால் அங்கே கட்டாயம் ஷாம்பெயின்இருக்கும். அப்போதுதான் பார்ட்டிகளை கட்டும். அந்த ஷாம்பெயின் இப்போது அழகு சிகிச்சைக்கு வந்திருக்கிறது.

*யெஸ், ஷாம்பெயின் உபயோகித்துச் செய்யப்படுகிற ஃபேஷியல் மற்றும் உடல் மசாஜுகள் அழகுத் துறையில் ரொம்ப ரொம்ப லேட்டஸ்ட்! ‘‘மிகக் குறைஞ்ச அளவு ஷாம்பெயின் குடிக்கிறது இதயத்துக்கும், மூளைக்கும் நல்லதுனு சொல்றதுண்டு. ஷாம்பெயினும் ஒரு விதமான ஒயின்தான்.

*ஃபிரான்ஸ் நாட்ல ஷாம்பெயின்-னு சொல்லப்படற ஒருவித உயர் தர திராட்சைகளைக் கொண்டு தயாராகிற லைட்டான, போதை தராத ஒயின் தயாராகுது.இதோட இன்னொரு பெயர் ‘டெவில்ஸ் ஒயின்’. பாட்டிலை திறக்கறப்பவே பெரிய சத்தம் கிளம்பறதால அப்படியோர் பெயர்.

*ஷாம்பெயினை உபயோகிச்சு ஃபேஷியல் பண்றப்ப, சருமத்தோட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, மேடும், பள்ளமுமா இருக்கிற சருமம் சரியாகும். சரும நிறமும் கூடும்’’ என்கிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.எல்லா வயதினருக்கும், எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது இந்த ஷாம் பெயின் ஃபேஷியல் என்பது இன்னொரு சிறப்பம்சம்.

*‘‘சருமத்தை சுத்தப்படுத்த கிளென்சர்லேர்ந்து, மசாஜ் கிரீம், ஸ்க்ரப், மாஸ்க்னு எல்லாத்துலயும் ஒரிஜினல் ஷாம்பெயின் கலந்திருக்கும். இள வயதுப் பெண்கள்,ஸ்க்ரப்பை மட்டும் தவிர்த்துட்டு, மத்ததை உபயோகிக்கலாம். அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, பருக்களை விரட்டும். கை, கால்,கழுத்துனு கருத்துப் போன இடங்கள்ல உபயோகிச்சா, சருமம் சாதாரண நிறத்துக்குத் திரும்பும்.

*முதுமையைத் தள்ளிப் போட உதவறதால, வயதான பெண்களுக்கும் ஏற்றது. ரொம்ப வறண்டு, தடித்துப் போன சருமத்தையும் மிருதுவாக்கும். வெயிலால உண்டான பாதிப்புகளைப் போக்கும்.கல்யாணத்துக்கு முன்னாடி இந்த ஃபேஷியலை செய்துக்கிறது இப்ப மணப்பெண்கள் மத்தில பிரபலமா இருக்கு. முரட்டு சருமத்தை மிருதுவாக்கறதால,ஆண்களும் செய்துக்கலாம்.

*கொஞ்சமும் அலர்ஜி ஏற்படுத்தாத அழகு சிகிச்சை இது...’’ ஷாம்பெயின் ஃபேஷியலின் நன்மைகளை அடுக்கியவாறே,ஒரு பெண்ணுக்கு அதைச் செய்து முடித்தார் வசுந்தரா.மேக்கப் போட்ட மாதிரி அவரது முகத்தில் அப்படியொரு வசீகரம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.