அதிவேகமாக உயர்ந்து வரும் மக்கள்தொகை காரணமாக இந்தியாவில் அடுத்த 35 ஆண்டுகளில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவும் என நேற்று வெளியிடப்பட்ட ஐ.நா.வின் ஆசிய-பிசிபிக் பிராந்திய மனிதவள வளர்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய விபரங்கள் பின்வருமாறு:-
கடந்த 1991 முதல் 2013 வரை இந்தியாவில் வேலை செய்வதற்கு ஏற்ற வயதுடைய மக்கள்தொகை 30 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கே வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற நிலை இருப்பதால் இதில் 14 கோடி பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர இயலும்.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் பேர் வேலையை தேடுபவர்களாக உருவாகிறார்கள். பலர், மேற்படிப்புகளை தேர்வு செய்கிறார்கள். தற்போது, இந்தியாவில் 3 கோடி மாணவர்கள் உயர்கல்வியை பயின்று வருகிறார்கள். இப்படியே சென்றால் வரும் 2050-க்குள் 28 கோடி பேர் புதிதாக வேலை தேடும் படலத்தில் இணைவார்கள்.
இந்தியாவை பொறுத்தவரையில், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். குறைந்த சம்பளம் வாங்கும் மக்கள்தொகையை அதிகம் கொண்டுள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. எனவே தொழிற்துறை மற்றும் உற்பத்தித்துறையில் அதிக கவனம் செலுத்தினால் இங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது சீனாவில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தித்துறை இன்னும் கூட பெரிய அளவில் வளரவில்லை. ஜி.டி.பி.யில் 15 சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கும் உற்பத்தித்துறை 11 சதவீத வேலைவாய்ப்புகளையே வழங்கி வருகிறது.
இவ்வாறு ஐ.நா.வின் ஆசிய-பசிபிக் மனிதவள அறிக்கையில் இந்தியாவில் எதிர்கால வேலைவாய்ப்பு நிலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தித்துறையை வலுப்படுத்தி வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் மத்திய அரசு 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை தொடர்ந்து ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.