சேலம் மாவட்டம் ஓலப்பாடியை சேர்ந்த நவாப்(48) பெத்தநாயக்கன் பாளையத்தில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். தலைவலி, காய்ச்சல், சளி பாதிப்புக்கு மருந்து கேட்டு வரும் பொதுமக்களுக்கு கடைக்குள்ளேயே ஊசி போட்டு சிகிச்சையளித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, நவாப்பின் மெடிக்கலுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது நவாப் ஊசி போட்டதில், மாணவி மயங்கினார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவியிடம் மருந்து, மாத்திரைகள் கொடுத்த நவாப், அதை சாப்பிட்டால் சரியாகி விடும் என கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.மாணவி சோர்ந்த நிலையில் இருந்தது கண்டு அவரது தாய் விசாரித்த போது, மாணவிக்கு மயக்க ஊசி போட்டு, நவாப் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையறிந்த மாணவியின் உறவினர்கள் நவாப்பை பிடித்து அடித்து, உதைத்தனர். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் நொறுக்கினர். அவரது பைக்கை தீவைத்து கொளுத்தினர்.
ஏத்தாப்பூர் போலீசார் வந்து நவாப்பை மீட்டு ஆத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த ரகுபதியும்(22), மாணவியும் இரண்டு வருடமாக காதலித்து வந்தனர். இதில், மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இதை அறிந்த காதலன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாணவியை நவாபிடம் அழைத்துச்சென்று கருக்கலைப்பு செய்ய வைத்தார். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மீண்டும் நவாப்பிடம் அழைத்துச் சென்றபோது, அவர் மயக்க ஊசி போட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முறைகேடான உறவுகளில் கர்ப்பமாகும் பெண்களுக்கு, நவாப்பின் மெடிக்கல் சென்டரில் கருக்கலைப்பு செய்து வந்ததும், அதுபோன்ற சமயங்களில், மொபைலில் படம் பிடித்து, அந்த பெண்களை மிரட்டி மற்ற ஆண்களிடம் ஒன்றாக இருக்க வைத்ததாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். இதையடுத்து, மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த புகாரின்பேரில், ஆத்தூர் மகளிர் போலீசார் நவாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாணவியின் காதலனையும் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.