Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 7, 2016

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியருக்கு சரமாரி அடி


திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த கிளியனூர்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில்  தமிழ்செல்வன் (36) என்பவர் ஆசிரியராக இருக்கிறார். இவர் தங்களிடம் சில்மிஷம் செய்வதாக பள்ளி மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.  இதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர் தமிழ்ச்செல்வனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த பொதுமக்கள் அங்கு  திரண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை ஜெம்புநாதபுரம் போலீசில்  ஒப்படைத்தனர்.

காவல் நிலையம் முன்பு கூடிய பொதுமக்களிடம் துறையூர் ஏஇஓ புகழேந்தி தமிழ்ச்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  தா.பேட்டை இன்ஸ்பெக்டர் சிவா பொதுமக்களிடமும், தமிழ்ச்செல்வனிடமும் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டபோது  ஆசிரியர் தமிழ்ச்செல்வன் மீது பாலியல் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது  என்றனர்.

இந்நிலையில் ஏஇஓ விசாரணை அறிக்கையை பெற்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொ) விஜயேந்திரன் ஆசிரியர் தமிழ்ச்செல்வனை  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இருப்பினும் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை எதுவும் இல்லாததால்  பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இப்புகார் குறித்து புதிய முறையில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறு  போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.