பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக ஹிந்தி நடிகர் சல்மான் கான் அறிவிக்கப்பட்டார்.
தில்லியில் நேற்று காலை (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில், சல்மான் கானின் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபூர்வி சண்டீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது சல்மான் கான் பேசுகையில், "ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியினர் சிறப்பாகச் செயல்படுவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக ஹிந்தி நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டது ஏன் என்று மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து யோகேஷ்வர் தத் தனது டுவிட்டர் பக்கத்தில், “விளையாட்டு வீரர்களான பி.டி.உஷா மற்றும் மில்கா சிங் போன்றோர் இக்கட்டான நிலையிலும் இந்தியாவிற்காக கடுமையாக முயற்சி செய்து விளையாடினர். ஆனால், அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ள சல்மான் கான் விளையாட்டிற்காக என்ன செய்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”சினிமாக்களை ஊக்குவிக்க இந்தியாவில் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், சினிமாக்களை ஊக்குவிக்க ஒலிம்பிக் சரியான இடம் இல்லை. சிறந்த அம்பாசிடருக்கு என்ன பங்களிப்பு என்று யாராவது சொல்ல முடியுமா? மக்களை ஏன் முட்டாள் ஆக்குகிறீர்கள்?” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.