Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2016

முனிவர் வந்திருக்கேன்!-சிறுகதை s


கிராமத்தில் வசித்து வந்த ஆட்டிற்கு, காட்டிற்குச் செல்ல வேண்டுமென ஆவல் ஏற்பட்டது. உடனே, காட்டை நோக்கிச் செல்லத் தொடங்கியது அந்த ஆடு.
காட்டில் பச்சை இலைகளுடன் கூடிய செடி, கொடி, மரங்களைப் பார்த்ததும், மிகவும் மகிழ்ச்சியடைந்தது ஆடு.
"அடடே, காடானது இவ்வளவு பசுமையாக இருக்கிறதே! இத்தனை நாட்களாக நாம் காட்டை பற்றி தெரியாமல் இருந்து விட்டோமே... இனிமேல், நாம் கிராமத்திற்குச் செல்ல வேண்டாம். இந்த காட்டிலேயே தங்கி விட வேண்டியதுதான்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.
காட்டில் பச்சை செடி, கொடிகளைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆடு வெகுநேரம் வரையிலும் மேய்ந்துகொண்டிருந்தது. மாலை நேரமானதையும் மறந்து மகிழ்ச்சியுடன் மேய்ந்து கொண்டிருந்தது ஆடு.
மாலைக் கருக்கல் வந்தவுடன் காடே இருட்டத் தொடங்கியது. அப்போதுதான் ஆடானது தன் நிலைக்கு வந்தது.
"ஐயோ, நான் பெரும் தவறு செய்து விட்டேனே! காடு இருட்டி விட்டது. இந்த இருட்டில் நான் எங்கே செல்வது? ஆங்காங்கே கொடிய மிருகங்களின் சப்தம் கேட்கிறதே. நான் ஏதாவது மிருகங்களின் கண்களில் சிக்கினால் எனக்கு ஆபத்துதான் ஏற்படும். தற்போது ஏதாவது ஒரு குகையினுள் சென்று ஒளிந்து கொள்வோம். அதன்பின்னர் காலை பொழுது புலர்ந்ததும் காட்டை விட்டு கிராமத்திற்குச் செல்லலாம்' என்று மனதில் எண்ணியது.
உடனே அருகில் ஏதாவது குகை தென் படுகிறதா என்று பார்த்தது. தான் நின்றிருந்த இடத்தின் அருகே குகை ஒன்று தென்படவே, அந்தக் குகையினுள் சென்றது ஆடு.
குகையினுள் சென்ற ஆடு திடுக்கிட்டது. குகையின் உள்ளே சிங்கம் ஒன்று படுத் திருந்தது.
சிங்கத்தைக் கண்ட ஆடு திடுக்கிட்டது. அதே நேரத்தில், சிங்கமும் அந்த ஆட்டை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தது.
உடனே அந்த ஆடானது சிங்கத்திடம் இருந்து நான் தப்பிக்க வேண்டுமானால் ஏதாவது ஒரு தந்திரத்தைக் கையாள வேண்டும். அப்போதுதான் நான் உயிர் பிழைக்க முடியும் என்று மனதுக்குள் நினைத்தது. ஆட்டின் மனதுக்குள் ஓர் யோசனை தோன்றியது. அது கம்பீரமாக சிங்கத்தைப் பார்த்தது.
""சிங்கமே, நான் ஒரு முனிவர். உன் குகையில் இன்று இரவு மட்டும் நான் தங்கிக் கொள்ள அனுமதி தருகிறாயா?'' என்று கேட்டது.
""நீ ஆடல்லவா? உன்னைப் போய் முனிவர் என்கிறாயே,'' என்று கோபத்துடன் கேட்டது சிங்கம்.
""சிங்கமே, நான் இரவு நேரத்தில் மட்டும் ஆடாக இருப்பேன். பகல் நேரத்தில் என் வடி வத்தை மாற்றிக் கொள்வேன். சில நேரங்களில் மனிதனாகவும், இல்லையென்றால், ஆடு போன்றும் மற்றும் பல வடிவங்களில் இருப்பேன்,'' என்றது ஆடு.
அதனைக் கேட்டதும் சிங்கம் வியப்படைந்தது.
""ஆடே, நீ என்ன சொல்கிறாய்? நீ ஒரு முனிவரா? கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதே! அப்படியென்றால், உன்னை நான் ஆடு என்று அழைக்க மாட்டேன் முனிவர் என்றே அழைப்பேன்.
""முனிவரே, தாங்கள் தாராளமாக என்னுடைய குகையில் தங்கிக் கொள்ளலாம். இரவு முழுவதும் குகையில் படுத்துவிட்டு காலைப்பொழுதில் எழுந்து செல்லலாம்,'' என்றது சிங்கம்.
""சிங்கமே, உனக்கு மிகவும் நன்றி. நிச்சய மாக நீ இறந்த பின்னர் சொர்க்கத்திற்குச் செல்வாய். உனக்கு அங்கே எல்லாவிதமான சவுகரியங்களும் கிடைக்கும்!'' என்றது ஆடு.
அதன்பின்னர் ஆடானது சிங்கத்தின் குகை யில் படுத்துக் கொண்டது. மறுநாள் அதிகாலைப் பொழுதில் எழுந்து கொண்டது ஆடு.
அந்த நேரத்தில் சிங்கம் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தது. இதுதான் சரியான சமயம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆடானது வேகமாக குகையை விட்டு வெளியேறியது.
"அப்பாடா, நான் சிங்கத்தின் குகையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இனிமேல், எனக்குப் பயமில்லை. நான் உடனடியாக இந்தக் காட்டைக் கடந்து என் கிராமத்திற்கே சென்று விட வேண்டும்' என்று மனதில் எண்ணியபடி ஓட்டமெடுத்தது ஆடு.
ஆடு தன்னுடைய புத்திசாலித்தனத்தால் தப்பித்தது. இதுக்குத்தான் புத்தியை, "யூஸ்' பண்ணுங்க என்பது!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.