நாமக்கல் மக்களின் மனிதநேயத்திற்கு இதைவிட சிறந்த சான்று இருக்க முடியாது. 'நம்பிக்கை இல்லம்' என்ற பெயரில், ஆதரவற்ற குழந்தைகளுக்காக சகாயம் ஐ.ஏ.எஸ் திறந்த கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் மனிதநேயம் நிரம்பி வழிகிறது.
நாமக்கல் கலெக்டராக சகாயம் இருந்த சமயத்தில், ஆதரவற்ற குழந்தைகளுக்காக உதயமான சிறிய யோசனை, இன்று ஆலமரமாக கிளைபரப்பி வளர்ந்து நிற்கிறது. மோகனூர் செல்லும் வழியில் உள்ள விவசாய கிராமம் லத்துவாடி. இந்தக் கிராமத்தில், ஐம்பது சென்ட் நிலத்தில் நம்பிக்கை இல்லம் கட்டப்பட்டுள்ளது. வருகிற தமிழ்புத்தாண்டு தினத்தன்று திறப்பு விழாவை நடத்த இருக்கிறார்கள். சகாயம் ஐ.ஏ.எஸ், இயக்குநர் சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
" பல மொழிகளைக் கற்கக் கூடிய இடமாகவும், தொழிற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, விஞ்ஞானப் பயிற்சி என நமது பிள்ளைகளை வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் விதமாகவும் புதிய கட்டடத்தை வடிவமைத்திருக்கிறோம். எதிர்காலத்தில், தமிழ்வழியில் பாடம் நடத்தும் தரமான பள்ளியாகவும், ஜப்பான், ஜெர்மன், ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளை கற்கும் இடமாகவும் மாற்றுவோம். கிராமத்துப் பிள்ளைகளை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செய்யும் விதமான பயிற்சிகளை வழங்க இருக்கிறோம். மனப்பாட சக்தியை வளர்க்கும் கல்வியாக இல்லாமல், சிந்திக்கக் தூண்டும் கல்வியைக் கொடுக்கும் வகையிலான திட்டங்களை வைத்திருக்கிறோம். எங்கள் இல்லத்தில் ஆதரவற்ற நிலையில் 25 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள ஏழைப் பிள்ளைகள் அனைவரும் எங்கள் இல்லத்தில் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்" - என நெகிழ்ச்சியாகத் தொடங்கினார் சகாயம்.

'இப்படியொரு முயற்சி எப்படி சாத்தியமானது?' என்ற கேள்வியை அவரிடம் கேட்டோம்.
" 2009-ம் ஆண்டு நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, ஒருநாள் ஃபைல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆதரவற்ற குழந்தைகள் இருவருக்கு அரசின் உதவித் தொகை கொடுப்பது தொடர்பான கடிதம் ஒன்று வந்திருந்தது. அவர்களுக்கு ஏன் இந்த நிலை வந்தது? என சம்பவத்தைப் படித்தபோது, அதிர்ந்து போனேன். நான் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓவாக இருந்து வெளிவந்த நேரத்தில், ஒரு வழக்கில் போலீஸின் நடவடிக்கை சரியில்லை என்றுகூறி, ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டர். இது நடந்தது 2003-ம் ஆண்டு. அதன்பிறகு அந்தப் பெண்ணின் கணவர் நாமக்கல்லுக்கு வந்துவிட்டார். அவருக்கு நிலத்தில் நீர் உள்ளதா? என கண்டுபிடிக்கும் வேலை. இரண்டு குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவரும் மாரடைப்பால் இறந்துவிட்டார். இந்த இரண்டு குழந்தைகளையும் யாரோ ஒருவர் வளர்த்துக் கொண்டிருந்தார். இவர்களுக்கு உதவித் தொகை கேட்டு வந்த கடிதத்தைத்தான் நான் பார்த்தேன். உடனே, அந்தக் குழந்தைகளை காப்பகம் ஒன்றில் சேர்த்துவிட்டேன். அந்த இல்லத்தில் இருந்து அந்தக் குழந்தைகள் ஓடிப் போய்விட்டனர். அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்பதற்காக, கலெக்டர் அலுவலகத்திற்கு அருகிலேயே ஓர் இடத்தைத் தேர்வு செய்து அந்தக் குழந்தைகளை பராமரித்து வந்தேன். அப்படித்தான் என்னுடைய முயற்சி தொடங்கியது" என்று சொல்லி நிறுத்தியவர்,

" அந்த இல்லத்தில் மூன்று நேரம் உணவுகள், பராமரிப்புக்கு ஆட்கள், அருகில் உள்ள அரசு பள்ளியில் படிப்பு என அனைத்த வசதிகளையும் செய்து வந்தோம். இதைப் பார்த்து மேலும் சில ஆதரவற்ற பிள்ளைகள் உதவி கேட்டு வந்தார்கள். அப்படி சிறிது சிறிதாக வந்தவர்கள், இப்போது 25 குழந்தைகள் வரை இருக்கிறார்கள். இவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஓர் இல்லத்தை உருவாக்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டே இருந்தேன். இவர்களைப் போல வசதியற்ற ஆயிரக்கணக்கான ஏழைப் பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய கட்டடம் கட்டும் முயற்சியைத் தொடங்கினோம். நண்பர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு லத்துவாடியில் 50 சென்ட் இடம் வாங்கிவிட்டோம். ஆனால், கட்டடம் கட்ட நிதி வேண்டுமே? மக்களிடமே போனோம். என் பெயரைச் சொன்னதும், மக்கள் மறுபேச்சில்லாமல் தங்கள் உழைப்பில் ஒரு பகுதியை தாராளமாக கொடுத்து உதவினார்கள். இதுவரையில் நாற்பத்தைந்து லட்ச ரூபாய் வரைக்கும் கொடுத்து உதவியிருக்கிறார்கள்.
நாமக்கல் மக்களின் கருணை உள்ளத்தால் நெகிழ்ந்து போனேன். கட்டடம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. புதிய கட்டடத்தில் அறிவியல் பயிற்சி, கணினி பயிற்சி, விஞ்ஞானப் பயிற்சி, பல மொழிகளைக் கற்கும் பயிற்சி என நல்ல தரத்தில் அனைத்தையும் உருவாக்க இருக்கிறோம். புத்தாண்டுக்குப் பிறகு ஏழைப் பிள்ளைகளுக்கு புதிய நம்பிக்கைகளை விதைக்கும் இடமாக நத்துவாடி இருக்கும்" என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு.
சகாயம் இருக்கும் இடத்தில் எப்போதும் புதிய நம்பிக்கைகள் பிறக்கும். லத்துவாடியிலும் அவை கிளை விட்டு பரவட்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.