வசதியான குடும்பத்தில் பிறந்தவர் செந்தில். பிராணிகள் மீது அவருக்கு அளவற்ற ஆவல். தனது பங்களாவில் விலை உயர்ந்த நாய் ஒன்றை வளர்த்தார். அந்நாயின் பெயர் ரோஸி. ரோஸியை நன்றாக பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே ஓர் வேலைக்காரனை அமர்த்தினார். அவன் பெயர் முத்து.
சில பணக்கார வீட்டு வேலைக்காரர்கள் கூலிக்கு மாரடிப்பவர்களாகவே இருப்பர். ஆனால், முத்துவோ, ரோஸியை வளர்ப்பதில் தனி அக்கறை எடுத்துக் கொண்டான்.
செந்திலுக்கு இரண்டு பேரப் பிள்ளைகள். மூத்தவன் தீபக்; இளையவன் தீபன். மாலை வேளையில் ரோஸியுடன் விளையாடுவதை அவர்கள் பொழுது போக்காகக் கொண்டிருந்தனர்.
பள்ளிக்கூடம் விட்டு தீபக்கும், தீபனும் வந்துவிட்டால் போதும், வாலை ஆட்டிக் கொண்டு அவர்கள் மீது தாவி, நாக்கால் அவர்களை நக்கித் தன் அன்பைக் காட்டிக் கொள்ள ரோஸி தயங்குவதே இல்லை.
ஏழை, எளியவர்கள் உதவி கேட்டு செந்திலைப் பார்க்க வருவர். அவர்கள் ரோஸிக்கு வைக்கப்படும் உயர்தர உணவு வகைகளைப் பார்த்து செந்தில் வீட்டில் நாயாகப் பிறந்திருந்தால் செல்லமாக வாழ்ந்திருக்கலாமே என நினைத்துக் கொள்வர். தொழில் காரணமாக காலையில் போகும் செந்தில் இரவுதான் வீடு திரும்புவார்.
பங்களாவிற்கு வந்தால் அவர் ரோஸியை கொஞ்சி விட்டுத்தான் காபியே குடிப்பார். இரவு அதற்குத் தன் கையால் பால் ஊற்றிக் கொடுத்து விட்டுத்தான் அவரே சாப்பிடுவார். இரவில் தன் படுக்கை அறையில் ரோஸியைப் படுக்க வைப்பார்.
""ஏண்டா! தீபக், தாத்தா நம்மைக் கூட அவர் அறையில் படுக்க வைப்பது இல்லை. இந்த ரோஸி இல்லாமல் தாத்தாவிற்கு தூக்கம் வராதா?'' என ஒருநாள் கேட்டான் தீபன்.
""தீபன்! ரோஸி மீது தாத்தாவுக்கு அவ்வளவு பாசம். தாத்தா கூட நம்மீது அளவு கடந்த அன்பு காட்ட என்ன காரணம் என நினைக்கிறாய்? நாம் செல்லமாக ரோஸியை வைத்துக்கொள்வதினால்தான் தாத்தா நம்மீது உயிரையே வைத்திருக்கிறார். நீ ஒருநாள் ரோஸியை அடித்துப்பாரேன் தாத்தாவின் குணம் தெரியும்!'' என்றான் தீபக்.
""விளையாட்டிற்குக் கூட ரோஸியை அடிக்க எப்படி மனம் வரும்!'' என்றான் தீபன்.
""ஒருநாள் தாத்தா வந்ததும் ரோஸியைக் காணாமல் தாத்தா எப்படித் துடித்துப்போனார் பார்த்தாயா? அதை வாக்கிங் அழைத்துப் போன முத்து காலதாமதம் ஆனதால் தாத்தாவிடம் எப்படித் திட்டு வாங்கினான். நீதான் பார்த்தியே! நாம்தானே தாத்தாவுக்கு அன்று ஆறுதல் கூறினோம்!'' என்றான் தீபக்.
""விளையாட்டுக்காக, ஒருநாள் ரோஸியை மறைத்து வைத்து தாத்தாவின் கோபம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாமா?'' என்று கேட்டான் தீபன்.
""விளையாட்டுக்குக் கூட நாம அப்படிச் செய்தோம் என வைத்துக்கொள். தாத்தாவின் கோபத்தை யாரால் சகிக்க முடியும்?'' என்றான் தீபக்.
நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள் செந்தில் நோயினால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கை ஆனார். ரோஸியும் கவலையுடன் படுத்தது. அவருக்கு நோய் என்று ரோஸிக்கு எப்படித் தெரிந்தது என்று தீபக்கும், தீபனும் ஆச்சரியப்பட்டனர்.
""தீபக்! நாம் கூட தாத்தாவுக்கு சுகம் இல்லை என்று தெரிந்தும் கூட நாம் சாப்பிடுகிறோம். ஆனால், ரோஸி எது வைத்தாலும் சாப்பிடுவதே இல்லை கவனித்தாயா? தாத்தாவின் காலடியில் போய்ப்படுக்கிறது. முத்து அதன் மீது எவ்வளவு பாசம் காட்டுவான். அவன் எவ்வளவோ கெஞ்சியும் சாப்பிட மறுக்கிறது பார்த்தியா?'' என்றான் தீபன்.
""தீபன்! தாத்தா அதைச் சாப்பிடச் சொல்லியும் கூட சாப்பிடவில்லை பார்த்தியா. தனக்கு உடல்நலம் சரி இல்லாவிட்டால் இது ஏன் சாப்பிடாமல் இருக்க வேண்டும்! என தாத்தா எவ்வளவோ வருத்தப்பட்டார் தெரியுமா?
""தன்னை வளர்த்தவருக்கு உடல் நலம் சரியில்லை எனத் தெரிந்ததும் இந்த ரோஸி சாப்பிடாமலே இருப்பது ஆச்சரியமாக இல்லை! கணவன் நோய்வாய்ப்பட்டால் மனைவி கூட சாப்பிடுகிறாள். ஆனால், இந்த நாய் எவ்வளவு நன்றி உள்ள ஜீவனாக இருக்கிறது பார்த்தியா?'' என்றான் தீபக்.
அன்றிரவு செந்திலின் உயிர், அவர் உடலை விட்டுப் பிரிந்தது. மறுநாள் அவரை அடக்கம் செய்தனர். அந்த சவ ஊர்வலத்தில் ரோஸி கலந்து கொண்டது எல்லாருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
அவரின் அடக்கம் முடிந்தது. எல்லாரும் திரும்பினர். ரோஸி அவர் கல்லறையில் படுத்துக் கொண்டது. முத்து, தீபக், தீபன் மூவரும் அதை எவ்வளவோ கெஞ்சி அழைத்துப் பார்த்தனர். அது வர மறுத்து விட்டது. பலாத்காரமாக ரோஸியை இழுத்துவர விரும்பவில்லை.
தாத்தா இறந்து விட்டார்களே இனிமேலாவது பால், ரொட்டி ஏதாவது சாப்பிடுகிறதா எனப் பார்க்கலாம், என முத்துவை பாலும், ரொட்டியும் வாங்கி வர தீபக்கும், தீபனும் அனுப்பினர்.
தங்கள் தாத்தாவின் கல்லறையில், ரோஸி எதுவும் சாப்பிடாமல் ஏக்கத்துடன் படுத்திருந்ததை பார்த்து பரிதாபப்பட்டனர் தீபக்கும், தீபனும்.
பால், ரொட்டியுடன் முத்து வந்தான்.
""தாத்தா இறந்து விட்டதால் இனிமேல் ரோஸி சாப்பிடும்!'' என்றான் தீபக்.
முத்து வந்து ரோஸியை எழுப்பினான். அது முதலாளியின் கல்லறையிலேயே உயிரை விட்டிருந்ததை அறிந்து முத்து கதறி அழுதான். இதனைக் கண்ட தீபக் மற்றும் தீபனால் அழாமல் இருக்க முடியவில்லை.
இறுதியில் தாத்தாவின் கல்லறையில் அவர் காலடியில் ரோஸியைப் புதைத்தனர். மனிதன் கூட சில சமயங்களில் நன்றி இல்லாமல் நடந்து கொள்கிறான். நன்றி உள்ள நாய் முதலாளியின் கல்லறையில் உயிர் விட்டது, அவர்களது மனதை உலுக்கி எடுத்தது.
***

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.