வரலாற்று தொன்மைமிக்க எந்த ஒரு பொருளுமே அரசாலும், சமுதாயத்தாலும், மக்களாலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றுதான். இதைத்தான் நாம் எந்த சேனலைத் திருப்பினாலும் பிரபல நடிகர் ஒருவர் கூறுகிறார். அவர் கூறுவது பெரும்பாலும் வரலாற்று தொன்மைமிக்க கட்டடங்களைப் பற்றித்தான். ஆனால், உயிருள்ள ஒரு ஜீவநதியைப் பற்றி யாரும் இதுவரைக் கூறியது இல்லையே! அது ஏன் என யோசிக்கவும் நமக்கு நேரமில்லை.
ஒவ்வொரு நதி, அருவி, கடல் என அனைத்திற்கும் உயிர் உண்டு. ஆனால், நாம்தான் அவை அனைத்தையும் கொலை செய்கிறோம். இல்லை எனில் கட்டடங்களுக்கு அடியில் உயிருடன் சமாதி கட்டுகிறோம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் ஒரு ஆறுதான் சிற்றாறு. இந்த ஆற்றைப் பற்றிய வரலாற்றைத் தெரிந்து கொண்டு இன்றைய நிலையைக் காண்போம்.
சிற்றாறு என்பது தென்காசி நகராட்சியிலுள்ள் குற்றால மலையில் உற்பத்தியாகும் ஆறாகும். இது தாமிரபரணி ஆற்றின் முக்கிய துணை ஆறு. 80 கி.மீ. நீளமும், 1,722 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்ட இந்த ஆறு, தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரி என்னும் ஊரில் இணைகிறது. இவ்வாற்றுக்கு ஐந்து முதன்மைத் துணையாறுகள் உள்ளன. இதன் துணையாறுகளான ஐந்தருவி ஆறு, அரிகர நதி, அனுமன் நதி, அழுதகன்னியாறு ஆகியவை முறையே சிற்றாற்றில் கசமோட்சபுரம், தென்காசி, வீரகேரளம்புதூர், கடப்பாகொத்தி ஆகிய ஊர்களில் இணைகின்றன. இதைத்தவிர உப்போடை என்ற துணையாறும் உண்டு. இந்த ஆற்றின் இணையாறான அழுதகன்னி ஆற்றுப்படுக்கையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும், அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்களையும், குறுனிகர்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.

தென்காசி காசிவிசுவநாதர் திருக்கோயில் கட்டப்படுவதற்கு முன் அவ்விடத்தில் சிற்றாறு பாய்ந்தோடியது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் சிவன் தோன்றி, தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு வேண்டினார். அதற்கு முன் சிற்றாறு, தென்காசி சிற்றாற்று வீரியம்மன் கோயில் தோன்றிய இடத்திலும் மற்றும் இலஞ்சியிலுள்ள சிற்றாற்று வீரியம்மன் கோயில் தோன்றிய இடத்தின் வழியாகவும் சென்றது. சடைய வர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் தோன்றிய சிவன் கூறிய இடமோ சிற்றாறு செல்லும் இடத்தில் அமைந்தது. அதனால் அதை தெற்கு நோக்கி திசை திருப்பினான் பாண்டியன். அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட பழைய சிற்றாறு சென்ற இடங்களில் கட்டப்பட்டதே இந்த 2 கோயில்களும் ஆகும். இக்கோயில்களிலுள்ள அம்மன் சிற்றாறு திருப்பிவிட்டதால் ஏற்படும் வீரிய விளைவுகளை தடுப்பதன் காரணத்தினால் கட்டப்பட்டதாக நம்பிக்கை வைத்ததால் இக்கோயில்கள் சிற்றாற்று வீரியம்மன் கோயில் என பெயர் பெற்றன.
சிற்றாற்றிலிருந்து தென்காசி, செங்கோட்டை, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், வீராணம் வட்டம் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. மேலும், இப்பகுதிகளில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் சிற்றாறு விளங்கியது. இதுவே சிற்றாறு பற்றிய சிறிய வரலாறு.

இன்று சிற்றாறின் நிலையை இந்த புகைப்படங்களே கூறி விடும். இந்த அவல நிலைக்கு யார் காரணம்? அன்று பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு உயிரளித்த இந்த நதியின் உயிரைக் குடித்துக் கொண்டிருப்பது வேறு யாரும் இல்லை. நாம் தூக்கி எரியும் நெகிழிப் பைகளும், மருத்துவமனைக் கழிவுகளும்தான். சிற்றாற்றின் கரையின் இருபுறமும் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் தண்ணீர் சாக்கடை நீராக மாறி விடுகிறது. மேலும் சிற்றாற்றில் தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கழிவுநீர் கலந்து விடுகிறது. இதன் காரணமாக சிற்றாற்றை 'மினி கூவம்' என்றே அழைக்க தோன்றும். குற்றாலத்தில் உள்ள பெரும்பான்மையான கட்டடங்களில் உள்ள செப்டிக் டேங் கழிவுகள் நேரடியாக சிற்றாற்றில் கலந்து விடுகிறது.
முன்பொரு காலத்தில் அனைத்து மக்களும் ஆற்றில் குளிக்க செல்வார்கள். அங்கேயே துணியும் துவைத்து விடுவார்கள். ஓடும் நீர் என்பதால் எந்த அசுத்தமோ கிருமியோ ஒரு இடத்தில் தங்கி நிற்காது. இப்போது நிலையே தலைகீழ். ஆறு ஓடுவதும் இல்லை அங்கே குளிப்பதும் இல்லை. மாறாக வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்டியுள்ளோம். அரசு உதவியுடன் கழிப்பறை கட்டிய பலரும் செப்டிக் டேங்க் கட்டுவதற்கு மறந்து விட்டார்கள் போலும்! இதனால் மனித கழிவுகளின் புகலிடமும் இந்த ஆறே. மேலும், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கும், மக்காத குப்பைகள் அனைத்தயும் தூக்கி வீசுவது இந்த ஆற்றில்தான். ஒரு முழம் பூவை வாங்குவோம் பாலிதீன் பையில் சுற்றி. ஒரு அடி தள்ளி வந்ததும் அந்த பாலிதீன் பையை கழற்றி வீச வேண்டியது. அது மழையில் அடித்துச் செல்லப்பட்டோ, காற்றில் பறந்தோ சென்று நம் ஆற்றில் விழுகிறது. ஒன்று இரண்டு பைகள் அல்ல, ஓராயிரம் பைகள் இது போல.

நம்மில் பலர் விழிப்புணர்வு இல்லாமல் செய்கிறோம் எனக் கூறலாம். இந்த காலத்தில் கூற முடியாமல் இருந்தாலும் சிலர் இப்படி தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், மருத்துவமனைகளில் என்ன விழிப்புணர்வின்மை? பல மருத்துவமனையின் கழிவுகள் இந்த ஆற்றில்தான் கலக்கின்றன். பல கெமிக்கல் பாட்டில்கள், ஊசிகள், பிளாஸ்டிக் பட்டில்கள் எனப் பல வகை நெகிழிப் பொருட்களை இந்த ஆற்றில் காணலாம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்றில், பல நீர்த்தாவரங்கள் மிதக்கும். இதனால் நீர் மிகவும் தூய்மையாக இருக்கும். மேலும், நதியின் சூழல் (river ecosystem) சமநிலையில் இருந்தது. இதனால், மீன் மற்றும் மற்ற நீர்வாழ் உயிரிகள் ஆற்றில் காணப்பட்டன. ஆனால், இப்போது நெகிழியைத் தவிர எதுவும் கண்ணில் படவில்லை. காரணம் நாம்தான். நாம் மட்டும்தான்.
அரசு ஒருபுறம் நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும். மருத்துவமனைக் கழிவுகள் கொட்ட இதுவா இடம்? அரசு மௌனமாக இருக்க காரணம் நாம் அமைதி காப்பதால்தான். தினமும் பேருந்தில் ஒரு முறையேனும் இந்த ஆற்றைக் கடக்காதவர் இருக்க மாட்டார்கள். எத்தனை பேர் நாம் சுத்தம் செய்வோம் என யோசிக்கிறார்கள்? அப்படி யோசித்த ஒரு கல்லூரி மாணவனைச் சந்திக்க நேர்ந்தது. கு.ராஜவேல், இரண்டாம் ஆண்டு கணிதம் படிக்கிறார். இந்த ஆற்றை சுத்தம் செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல நண்பர்களுக்கு இதைப் பற்றி விளக்கி ஆற்றை சுத்தம் செய்ய எண்ணம் கொண்டுள்ளார். ஆனால், அரசின் உதவி கண்டிப்பாக தேவைப்படும்.
இவர் கூறுகையில், "முதலில் பிளாஸ்டிக் அதிகமாக உபயோகப்படுத்துறது படிச்சவங்கதான். அவங்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தணும். படிக்காதவங்களுக்கு சொல்லி புரிய வெச்சுரலாம். ஆனா, படிச்சவங்கள திருத்தத்தான் கொஞ்சம் முயற்சி எடுக்கணும். அரசு கொஞ்சம் உதவி செய்யணும். என்ன மாதிரி நிறைய பேர் இந்த மாதிரி ஆர்வமா இருக்கோம். எங்கள பயன்படுத்தி கொஞ்சமாவது இந்த ஆற்றை சுத்தம் செய்யணும். பல ஏக்கர் நிலத்துக்கு உயிர் கொடுத்த ஆறு... முழுசா சாகறதுக்குள்ள காப்பாத்தணும்" என்றார்.

இதுபோல சமுதாய அக்கறையுடைய பல இளைஞர்களின் சக்தி வீணாகக் கிடக்கிறது. அதை பயன்படுத்தி இன்றே மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இப்போது நாம் மாறினால்தான், நம்முடைய 10-வது தலைமுறையாவது நிம்மதியாக வாழும். இல்லையேல், அடுத்த தலைமுறையும் நெகிழியால் மூடப்பட்ட பல ஆறுகள் மரணித்தது போல் செத்து விழும்.
சிற்றாறு போல் பல அழகிய ஆறுகளை மீட்டெடுக்க முயற்சி எடுப்போம். தனிமனிதனாக முயற்சி எடுப்போம். ஏனெனில், பல தனிமனிதர்கள்தான் ஒரு சமுதாயம். பல சமுதாயங்கள்தான் ஒரு நாடு. பல நாடுகள்தான் இந்த உலகு!
ஒன்று நிச்சயம், நாம் இன்று தூக்கிவீசும் ஒவ்வொரு நெகிழிப்பொருளும் ஒரு ஆறின், ஒரு பெருநதியின், ஒரு கடலின் இந்த அகிலத்தின் மரணத்திற்கு காரணமாக இருக்கும்.
"நைல் நதி எகிப்திற்கு மட்டும்தான் துயரம்
ஆனால், நெகிழி நதி உலகிற்கே துயரம்!"
சிந்திப்போம், செயல்படுவோம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.