நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொதுக் கூட்டங்களை கலக்க ஆரம்பித்துவிட்டார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். வழக்கம்போல, 'தூக்கி வெளிய எறிய வேண்டியதுதானே' என தொண்டர்களைப் பார்த்து அவர் எகிறும் காட்சிகள் வைரலாகிறது.
மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களோடு ஒரே மேடையில் காட்சி தருவது, தலைமுடியை தூக்கி வாரிச் சீவுவது, கண்ணாடியை மாற்றியது என பழைய பன்னீர்செல்வமாக மாறிவிட்டார் விஜயகாந்த். 'வெளியில் தலைகாட்டாம்ல் சிங்கப்பூர் போய்விட்டார் என்றெல்லாம் கேப்டனைப் பார்த்து கிண்டல் செய்தார்கள். அவர் எங்கும் போகவில்லை. பழைய கேப்டனாக களமிறங்கிவிட்டார்' என உற்சாகப்படுகிறார் தே.மு.தி.க தொண்டர் ஒருவர். நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில், விஜயகாந்தின் முக பாவனைகளால் தே.மு.தி.கவினர் ரொம்பவே கலவரப்பட்டார்கள். 'சத்தம் போடறவங்களைத் தூக்கி வெளிய எறிய வேண்டியதுதானே?' என கொதிப்பில் கத்த, கூட்டம் சிறிது நிமிடம் அடங்கிப் போனது.
' மீண்டும் பழைய கேப்டனாக மாறியது எப்படி?' என்றோம் தே.மு.தி.க நிர்வாகி ஒருவரிடம்,
" சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தமிழக அரசியல் களம் கேப்டனைச் சுற்றியே இருந்தது. அவர் என்ன முடிவெடுப்பார் என்பதை அறிந்து கொள்ள அனைவருமே ஆவலாக இருந்தார்கள். ஆனால், முன்பைவிட அவரது உடல்நலனைத் தீவிரமாகக் கவனிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால்தான் வெளியில் வராமல் தீவிர சிகிச்சையில் இருந்தார். மக்கள் நலக் கூட்டணியோடு சேருவது என அறிவிப்பை வெளியிட்ட பிறகு, பத்து நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். அந்த நாட்களில் அவர் யாரையும் சந்திக்கவில்லை. கூட்டங்களில்கூட பிரேமலதா மட்டுமே கலந்து கொண்டு பேசினார்.

சிங்கப்பூர் மருத்துவர்களோடு டெலி மெடிசன் முறையில் சிகிச்சை பெற்று வந்தார். தேர்தல் நெருக்கத்தில் முதலமைச்சர் வேட்பாளர் என்பதால், வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தால் வேறு மாதிரி பேசுவார்கள் என்பதால் அதிரடி சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்டார். அந்த பத்து நாள் சிகிச்சை அவரை பழையபடி மாற்றிவிட்டது. அதற்கு முன்பு ரொம்பவே இளைத்திருந்தார். இப்போது ஒரு சுற்று பெருத்துவிட்டார். தவிர, கடந்த தேர்தலில் ஜெயலலிதாவோடு அவர் மேடையில் ஏறுவதையே தவிர்த்தார். இந்தமுறை வைகோ, திருமா, ஜி.ஆர், முத்தரசன், வாசன் உள்ளிட்ட தலைவர்களோடு மேடையேற வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.
கடந்த தேர்தல்களில் 'வி' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட கண்ணாடியை அணிந்திருந்தார். இப்போது அந்தக் கண்ணாடியை மாற்றிவிட்டார். பிரசார இடங்களில் துண்டு சீட்டில் எழுதித் தரும் குறிப்புகளை வாசிப்பதற்காகவே கண்ணாடி மாட்டியிருந்தார். சினிமா கதாநாயகன் என்பதால் அவரைப் பார்க்க இயல்பாகவே கூட்டம் கூடுகிறது. அதற்காகவே, மெனக்கெட்டு தலைமுடியை மாற்றினார். அவர் பேசும் கூட்டங்களில் தொண்டர்களின் ஆரவாரத்தைக் கட்சிக்காரர்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதிலும், விசில் சத்தம் எழுப்புவதை கேப்டனால் சகிக்க முடிவதில்லை.
எங்கெல்லாம் விசில் பறக்கிறதோ, அங்கெல்லாம் அவர் கோபமாகக் கத்துவார். 'தான் பேசுவதற்கு இடையூறாக சிலர் செயல்படுகிறார்கள்' என்ற கோபமும், 'மற்ற பகுதி மக்களுக்கு தான் பேசுவது போய்ச் சேருவதில்லை' என்ற ஆத்திரமும்தான் காரணம். எப்போதுமே ஒற்றை ஆளாகக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தியே பழக்கப்பட்டவருக்கு, இப்போதும் அதே மனநிலையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறார். நன்றாகக் கவனித்தால் தெரியும். தேர்தல் அரசியலில் ஈடுபட்ட நாள்முதலே கேப்டனின் குணம் ஒன்றுபோல்தான் உள்ளது. அவர் என்றைக்குமே மாறியதில்லை" என விளக்கம் கொடுத்தார் அவர்.
பழைய பன்னீர்செல்வமாக கேப்டன் வருவது நல்லதுதான்...அதற்காக, தொண்டர்களைப் பதம் பார்ப்பது சரியா?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.