Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 8, 2016

வங்கியில் 400 பவுன் நகை கொள்ளையில் திருப்பம் நாடகமாடி ‘சுருட்டிய’ பெண் ஊழியர் கைது


ராமநாதபுரம் அருகே வங்கியில் 400 பவுன் கொள்ளை அடித்த  பெண் ஊழியர், உறவினர் கைதாகினர். ராமநாதபுரம் அருகே தொருவளூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. வங்கியில் மொத்தம் 400 பவுனுக்குமேல் நகைகள் இருந்தன. நேற்று முன்தினம் வங்கி செயலாளர் கஸ்தூரி மட்டும் பணியில் இருந்தார். நகை மதிப்பீட்டாளர் விடுமுறையில் இருந்தார். வேறு யாரும் வங்கியில் இல்லை. மாலை 6 மணிக்கு மேலாகியும் வங்கியின் கதவுகள் திறந்து கிடந்ததால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

வங்கி செயலாளர் கஸ்தூரி, கைககள் கட்டப்பட்ட நிலையில்  கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் தன்னை கட்டிப்போட்டு 400 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கஸ்தூரி தெரிவித்தார். ராமநாதபுரம் எஸ்பி மணிவண்ணன் மற்றும் போலீசார் வந்து விசாரித்தனர். அப்போது, டூவீலரில் வந்த இருவர் தன்னிடம், ஒரு கிராமுக்கு எவ்வளவு பணம் தருவீர்கள். வங்கி ஒதுக்குப்புறமாக உள்ளது. திருட்டு பயமில்லையா? கண்காணிப்பு கேமரா இருக்கிறதா என தொடர்ந்து கேள்விகள் கேட்டதாகவும், அதற்கு, அலாரம் மட்டுமே உள்ளது என பதில் அளித்ததாகவும், பின்னர் தன்னை கயிறால் கட்டிப்போட்டு லாக்கரை திறந்து 400 பவுனை கொள்ளையடித்து தப்பி சென்றதாகவும் கஸ்தூரி போலீசாரிடம் தெரிவித்தார்.

லாக்கரில் கஸ்தூரியின் கைரேகைகளும் பதிவாகி இருந்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கஸ்தூரியின் கணவர் நந்தன், அவரது உறவினர் காளிதாஸ் நகைகளை கொள்ளையடித்ததும், அதற்கு கஸ்தூரி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து கஸ்தூரி, காளிதாசை போலீசார் கைது செய்தனர். அவர்  வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 பவுனை போலீசார் கைப்பற்றினர். மீதமுள்ள நகைகளுடன் தலைமறைவான நந்தனை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.