Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2016

''நல்லதோர் வீணையை நலங்கெட உடைத்த' ஏர் கனடா: ராஜேஷ் வைத்யா வேதனை


தமிழக வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் 90 ஆண்டுகள் பழமையான வீணையை ஏர் கனடா நிறுவனம் உடைத்த சம்பவம், வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இசைக் கச்சேரிக்காக கடந்த மார்ச் 31ம் தேதி அமெரிக்காவின் டல்லஸ் நகரில் இருந்து எட்மண்டன் நகருக்கு ஏர் கனடா விமானத்தில் சென்றார் வைத்யா. தனது பிரியத்துக்கும் ஆசைக்கும் உரிய அபிமான வீணையை ஒரு பெட்டியில் வைத்து, பத்திரமாக விமானத்தில் எடுத்துச் சென்றார்.
விமான நிறுவனத்தின் அலட்சியத்தால், வீணையை காணவில்லை. நிறுவனத்தில் புகார் செய்தார் வைத்யா. அந்நிறுவனமும் வீணையை தேடி, ஒரு வழியாக கண்டுபிடித்து ஏப்.6ம் தேதி ஒப்படைத்தது. வீணை திரும்ப கிடைத்ததில் ஆனந்தப்பட்ட வைத்யா, ஆசையுடன் பெட்டியை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம், வீணை உடைந்திருந்தது. இதில் ஒரு வினோதம், பெட்டி சேதம் அடையாமல், வீணை மட்டும் உடைந்திருந்தது. பெட்டிக்கு சேதம் ஏற்படாமல், உள்ளே இருந்த வீணை மட்டும் எப்படி சேதம் அடைந்தது என ஏர் கனடாவிடம் வைத்யா கேட்டபோது, சரியான பதில் கிடைக்கவில்லை.

இது குறித்து வைத்யா கூறும்போது, ''வீணை சேதம் அடைந்தது பற்றி ஏர் கனடா அதிகாரிகள் என்னிடம் பேசினர். எப்படி இழப்பீடு தர வேண்டும்; புது வீணை வாங்கி தரவும் தயார்'' என்று என்னிடம் கூறினர். அவர்களது சமாதானத்தை என்னால் ஏற்க முடியவில்லை. 90 ஆண்டுகள் பழமையான வீணை அது. அதற்கு எந்த வீணையும் ஈடாகாது. அதை வாசித்தால் கிடைக்கும் நாதம் ஈடு இணையற்றது. பெட்டி பத்திரமாக உள்ள நிலையில் வீணை மட்டும் எவ்வாறு சேதம் அடையும்?

இது புரியாத புதிர். இது தான் ஏர் கனடா சேவையின் லட்சணமா? ஒரு குழந்தை காணாமல் போனால் இன்னொரு குழந்தை வாங்கி தருகிறேன் என ஒரு தாயிடம் சொல்ல முடியுமா? அது போல் இருக்கிறது ஏர் கனடாவின் சமாதானம். இது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருந்தால், அது அந்நாட்டில் ஒரு போராட்டமாக வெடித்திருக்கும். இதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகவே இதை சொல்கிறேன். வீணைக்கு எவ்வாறு இழப்பீடு பெற வேண்டும் என எனக்கு தெரியும். அதை ஏர் கனடா நிறுவனத்திடம் தெளிவாக தெரிவித்து விட்டேன்.இவ்வாறு தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.

இந்திய பாரம்பரிய இசைக் கருவியின் அருமை அறியாமல், பழமை புரியாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்ட ஏர் கனடா நிறுவன அதிகாரிகளின் போக்கு, இசைக் கலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.