Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2016

லக்கானிக்கு 'லகான்' போடும் திமுக...! அம்பலமாகிறதா அதிமுக பாசம்?


பாரபட்சமாக நடந்து கொள்ளும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக- காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் சார்பில் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை இன்று சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்றும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனு கொடுத்து விட்டு வெளியே வந்த டி.ஆர்.பாலு, குலாம்நபி ஆசாத், இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக சட்டசபை தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதற்காக மாவட்ட தலைநகரங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கரூர், சென்னை, ஊத்தங்கரையில் ஏராளமான பணம் பிடிபட்டது.  வெள்ளி கொலுசுகளும், தங்க நகைகளும் ஏராளமான அளவில் பிடிபட்டுள்ளது.

இது தேர்தலுக்காக பட்டுவாடா செய்தவற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநில டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி போன்ற அதிகாரிகளை வரவழைத்து பணப்பட்டு வாடாவை தடுக்க வேண்டும்" என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.