Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 9, 2016

'நீங்கள் மற்றவர் மனைவியோடு பொருத்தமாக‌ இருப்பீர்களா...? -முகம் சுளிக்க வைத்த ரெய்னா!


இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா,  வரும் ஐ.பி.எல் தொடரில்,  குஜராத் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சி.எஸ்.கே அணியில் ஆடிய ரெய்னா,  தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளின் நாயகனாக திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் லயன்ஸ் அணி கேப்டனாக பத்திரிகையாளர்களை சந்தித்த ரெய்னாவிடம் ஒரு நிருபர்,  'நீங்கள் இந்திய பயிற்சியாளரை விரும்புகிறீர்களா அல்லது வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்புகிறீர்களா?' என்றதற்கு,  '' சார், ஒரு விஷயத்தை சொல்லுங்கள், நீங்கள் உங்கள் மனைவியோடு பொருத்தமாக‌ இருப்பீர்களா...  இல்லை மற்றவர் மனைவியோடு பொருத்தமாக‌ இருப்பீர்களா?" என நக்கலாக கேட்டிருக்கிறார். அருகில் இருந்தவர்கள் சிரித்ததும் அந்த நிருபருக்கு என்ன சொல்வதென்றே தெரியமல் முழித்துள்ளார்.

கேப்டன் கூல் என வர்ணிக்கப்படும் தோனியும் சரி, கூல் வீரர் எனப்படும் ரெய்னாவும் சரி மீடியாக்களிடம் வரம்பு மீறுவது வழக்கமாகிவிட்டது. உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 50 ரன்கூட அடிக்காமல்,  ஐபிஎல் போட்டிகளில் 500 ரன் அடிக்கும் ரெய்னாவுக்கு இப்படி கேட்க தகுதியில்லை என கொதிக்கின்றனர் நெட்டிசன்கள்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.