காஞ்சிபுரம் அருகே, முயல் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 108 முயல்கள்
இறந்தன.காஞ்சிபுரம் அருகே உள்ளது, வள்ளிமேடு கிராமம். இங்கு, 10 நாட்களுக்கு முன், சென்னையை சேர்ந்த குப்புசாமி என்பவர் குடும்பத்துடன் குடி வந்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன், ஆந்திர மாநிலம் சித்துாரிலிருந்து, 100க்கும் மேற்பட்ட முயல்களை வாங்கி வந்து, பண்ணை வைத்து தொழில் துவங்க முயன்றுள்ளார். நேற்று முன்தினம் குப்புசாமி மற்றும் அவர் மனைவி நவநீதம், சென்னைக்கு சென்றனர்; மகன்கள் கோபிநாத், 18, ஸ்ரீநாத், 16, ஆகியோர், பண்ணையில் துாங்கிக்
கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, திடீரென பண்ணையின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது. அதைப் பார்த்து அலறியடித்து, இருவரும் வெளியே ஓடினர். கொழுந்து விட்டெறிந்த தீ, பண்ணையை முற்றிலும் அழித்தது. இதனால், அங்கிருந்த, 108 முயல்களும் கருகி இறந்தன. அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியுள்ளது.
தகவலறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு சென்று, தீயை அணைத்தனர். தானாக முயல் பண்ணையில் தீப்பிடிக்க வாய்ப்பில்லை; மர்ம நபர்கள் தான் தீ வைத்திருக்க வேண்டும் என, கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். முயல்கள் கரிக்கட்டைகளாக கிடந்ததைப் பார்த்து, கிராம மக்கள் சோகம் அடைந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.