முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மகளும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி குடியிருக்க வாஜ்பாய் அரசு டெல்லியின் லத்யன்ஸ் பகுதியில் வீடு ஒதுக்கியது. எஸ்பிஜி, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் பரிந்துரையின்பேரில், உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள பிரியங்காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த வீட்டுக்கு ரூ.28,451 வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வாடகையை உயர்த்தி அரசு அறிவித்தது. இந்த வாடகையை கட்ட மறுத்து பிரியங்கா கடந்த 2002ம் ஆண்டு மே 7ம் தேதி அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், ‘நான் குடியிருக்கும் வீட்டின் வாடகை ரூ.53,421 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது எனது தகுதிக்கு அதிகம். பங்களாவின் பெரும்பகுதி கருப்பு பூனை படையினரால் (எஸ்பிஜி) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இங்கு தங்கியுள்ளேன். எனவே ஏற்கனவே நான் செலுத்தி வந்த 28 ஆயிரத்து 451 ரூபாயை மட்டுமே வாடகையை தொடர்ந்து செலுத்துவேன்’ என குறிப்பிட்டிருந்தார். ஆர்டிஐ.யின் கீழ் நொய்டாவைச் சேர்ந்தவர் அனுப்பிய மனு மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.