Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2016

இறால் வடை


தேவையான பொருட்கள்

இறால் - 1 கப்
தேங்காய் துருவியது - 1 கப்
இஞ்சி -  ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 4
உப்பு -  தேவைக்கு
வெங்காயம் - 2
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

* இறால்களை சுத்தம் செய்தபின் அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலாவுடன் அரைத்த இறாலை போட்டு உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இறால் மசாலாவை வடைகளாக தட்டி பொரித்தெடுத்தால் இறால் வடை ரெடி....!

* மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக ஸ்நாக்ஸ் இது.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.