Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 6, 2016

செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு


தேவையான பொருட்கள்:

 இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)

வறுத்து அரைப்பதற்கு... மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 2-4 சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

குழம்பிற்கு... எண்ணெய் - 1/4 கப் கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 1டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

பிறகு அதில் மசாலா பொடியையும், அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி, உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் குழம்பை கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் பிரியும் போது, அதில் இறாலை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.