குடிநீர் பிரச்னையின் காரணமாக நண்பரின் மனைவியை வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மைசூரு ஊட்டுஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ், இவருடைய மனைவி குமாரி [36]. இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகில் வசித்து வந்தனர். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ஷிவண்ணா [45]. இவர் வாணிவிலாஸ் பகுதியில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்த இரண்டு குடும்பத்தினரும் உறவினர்களாவார்கள். மேலும் இவர்கள் வீட்டிற்கு பொதுவாக ஒரு குடிநீர் குழாய் மட்டும் இருந்தது. தண்ணீர் பிடிக்கும் போது இரண்டு குடும்பத்தாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் . இதனால் இந்த பிரச்னை குறித்து வீட்டு உரிமையாளரிடம் ஷிவண்ணா மீது குமாரி புகார் தெரிவித்துள்ளார்.
அதன் காரணத்தால் ஷிவண்ணாவை உரிமையாளர் வீட்டை காலி செய்ய கூறி இருந்தார். அதனால் ஷிவண்ணா பக்கத்து கிராமத்தில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறி விட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த ஷிவண்ணா ஜெகதீஷ் வீட்டிற்கு சென்றார்.அந்த நேரத்தில் குமாரி அவருடைய வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஷிவண்ணா கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதனால் குமாரி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார்.இந்த சம்பவம் குறித்து பொது மக்கள் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த விஜயா நகர் போலீசார் வழக்கு பதிந்து ஷிவண்ணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.