Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

தி.மு.க சீனியரின் அ.தி.மு.க விசுவாசம்...! -கொதிக்கும் கோவை உடன்பிறப்புகள்!


சட்டமன்றத் தேர்தலில்,  தி.மு.க முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் உள்ளடிகளால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் கோவை மாவட்ட உடன்பிறப்புகள். இதுதொடர்பாக, அறிவாலயத்திற்கு புகார் கடிதங்களை தட்டிவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் கட்சியின் சீனியராக இருக்கிறார் தி.மு.க முன்னாள்  அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவரது ஆசிர்வாதத்தோடு போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர். தவிர, இவரது மகன் பைந்தமிழ் பாரியின் ஆட்டங்களால் மாவட்டத்திற்குள் கெட்ட பெயரும் எழுந்தது.

இந்நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கான ஒட்டுமொத்த கூட்டத்தையும் கலைக்கும் விதமாக பொங்கலூராரின் செயல்பாடுகள் இருப்பதாகக் கொதிக்கின்றனர் மாவட்ட உடன்பிறப்புகள். இதுதொடர்பாக, தலைமையின் கவனத்திற்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், " பொங்கலூராருக்கு கட்சியின் நலனைவிட தொழில்தான் முக்கியம். கடந்த தி.மு.க ஆட்சியில் கட்சிக்குக் கெட்ட பெயரை உருவாக்கிக் கொடுத்ததே இவரது குடும்பம்தான். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரோடு சாதி ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் பொங்கலூரார். இதே அ.தி.மு.க பிரமுகர்,  மேயர் பதவியில் இருந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான பிரச்னைகள்  நடந்தன. மக்கள் நலனுக்கு விரோதமாக நடந்து கொண்ட மேயருக்கு எதிராக ஒருமுறைகூட பொங்கலூர் பழனிச்சாமி போராட்டம் நடத்தியது இல்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் அவரும் அவரது மகனும் எங்கே இருந்தார்கள் என்றே தெரியவில்லை. இப்போது தேர்தல் வந்துவிட்டதால் மீண்டும் பதவியைப் பிடிக்க களத்தில் இறங்கிவிட்டனர். கோவை வடக்குத் தொகுதியில் மாவட்டச் செயலாளர் வீரகோபால், மீனா லோகு, தமிழ்மறை, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் சீட் கேட்டுள்ளனர். வீரகோபாலுக்கும் பொங்கலூராருக்கும் பழைய பகை இருப்பதால், இந்தத் தொகுதியில் பொங்கலூரார் கவனம் காட்டவில்லை.

அவரது கவனம் முழுக்க சிங்காநல்லூர் தொகுதியில்தான் உள்ளது. 'எனக்கோ என் மகனுக்கோ சீட் கொடுங்கள்' என கலைஞரை நெருக்கி வருகிறார். இதே தொகுதியில் முன்னாள் துணை மேயர் கார்த்திக் பல மாதங்களுக்கு முன்பே, தேர்தல் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். ரத்ததானம் முகாம் நடத்துவது, மரம் நடுவது என சிங்காநல்லூர் தொகுதிக்குள் நல்ல பெயரோடு இருக்கிறார். 'இந்தமுறை சீட் கைமாறிவிட்டால், மீண்டும் தலையெடுக்க முடியாது' என்பதால், எல்லா உள்ளடிகளையும் செய்கிறார் பொங்கலூரார்.

கடந்த தேர்தலில் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப் போனார். வேட்பு எண்ணும் மையத்திலேயே, 'ஆட்சியும் போச்சு. பதவியும் போச்சு. அஞ்சு வருஷம் தொழிலை மட்டும் பார்க்க வேண்டியதுதான்' என பகிரங்கமாகப் பேசினார் அவர். சொன்னபடியே இந்த ஐந்தாண்டுகளில் தொழிலை மட்டும்தான் கவனித்தார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் சீட் கொடுத்தால், ஒட்டுமொத்த மாவட்டமும் அதிருப்தி அடையும். யாரும் தேர்தல் வேலை பார்க்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதைப் பற்றி தளபதியின் கவனத்திற்கும் கொண்டு போயிருக்கிறோம்" என்றார் ஆதங்கத்தோடு.

உடன்பிறப்புகளின் அதிருப்தியையும் மீறி, பொங்கலூரார் குடும்பத்திற்கு சீட் ஒதுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.