Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2016

படிப்படியாக குறைக்க மதுவிலக்கு என்ன பழனிமலை படியா - பொன்.ராதா விளாசல்!


அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை படிப்படியாக குறைப்பதாக கூறிய ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளாசினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுக பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடக்கிறது. கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசுவதற்காக பேசுவதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு காலை 10.30 மணிக்கு வருகை தருகிறார்.

இந்த பொதுக்கூட்டம் நடக்க  உள்ள ராணுவ மைதானத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “ மிழகத்தை பொறுத்தவரை தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் முன்னேற்ற கல்வி கழகம், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் பல கட்சிகள் உள்ளன. பா.ஜ.க கட்சி சுமார் 140 தொகுதிகளில் போட்டியிடும். மற்ற இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். கூட்டணி  வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் வர உள்ளனர். அவர்களது பிரசார தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகள் எவ்வளவு வலுவான நிலையில் உள்ளதோ அதைப்போன்று  பாரதிய ஜனதா கூட்டணியும் வலுவாக தான் உள்ளது. பா.ஜ.க வைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் நடந்த தவறுகள் பற்றி மக்கள் மத்தியில் விளக்கி கூறி பிரசாரம் செய்வோம். கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் வருமானம் பல மடங்கு உயர்ந்தது பற்றியும் பேசுவோம். முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என கூறி உள்ளார்.  படிப்படியாக என்றால் சபரிமலை படியா அல்லது பழனி மலை படியா என தெரியவில்லை. கருணாநிதி முதல் கையெழுத்தே மதுவிலக்கிற்காக போடுவதாக கூறுகிறார். அதற்கு முன்னதாக தனது கட்சியினர் நடத்தும் மது தயாரிக்கும் தொழிற்சாலைகளை அவர் மூடச்சொல்ல வேண்டும்.




விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் இறந்து உள்ளனர். முதல்வர் பொதுக்கூட்டம் என்பதால் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருப்பார்கள். அதனையும் தாண்டி 2 பேர் இறந்தார்கள் என்றால் மைதானத்தின் கொள்ளளவை மீறி கூட்டத்தை கொண்டு வந்து குவித்தார்களா என்பது பற்றி தேர்தல் ஆணையம் கண்காணித்திருக்க வேண்டும்.

காரில் கட்சிக் கொடி கட்டக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை படம் எடுக்கிறார்கள். அப்படி எடுக்கப்படும் படங்கள் வெறும் படங்களாக போய்விடக்கூடாது. எனவே 2 பேர் பலியானது பற்றி தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசின் மின் திட்டங்களால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா பேசி உள்ளார். மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர் தான் விளக்கவேண்டும்” -இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.