உத்தர பிரதேசத்தில், 25 ஆண்டுகளுக்கு முன், 10 சீக்கியர்களை, போலி என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற, 47 போலீசாருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
உ.பி.,யின் தெராய் பகுதியில், 1990ம் ஆண்டுகளில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வந்தனர். இந்நிலையில், 1991 ஜூலை, 21ம் தேதி, சீக்கிய குழுவினர், பிலிபிட் நோக்கி, சொகுசு பஸ்சில் சென்றனர். அந்த பஸ்சை வழிமறித்த போலீசார், அதிலிருந்த, 10 சீக்கியர்களை அழைத்துச் சென்று, அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து, அடர்ந்த வனப்பகுதியில் சுட்டுக் கொன்றனர்.
பின், இவர்கள் அனைவரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் ஆயுதம் வைத்திருந்ததாகவும், அவற்றை பறிமுதல் செய்ததாகவும் கூறினர்.
பத்து சீக்கியர்களும், போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.
சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், விருதுகளை பெறவும், பயங்கரவாதி களை கொன்றதாக அங்கீகாரம் பெறவும், போலீசார் இந்த செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி, 57 போலீசாருக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையில் இருந்த போது, 10 போலீசார் இறந்து விட்டனர். மீதமுள்ள, 47 போலீசாருக்கு எதிரான வழக்கை விசாரித்த, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, 47 போலீசாரையும், குற்றவாளிகள் என அறிவித்து, ஏப்., 1ம் தேதி தீர்ப்பளித்தது.
இவர்களுக்கான தண்டனை விவரங்கள், நேற்று அறிவிக்கப்பட்டன. இவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.