Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2016

ஏலச்சீட்டு நடத்தி போலீஸ் குடும்பத்தாரிடம் மோசடி எஸ்ஐ மனைவி கைது


எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் போலீஸ் எஸ்ஐ ராஜசேகர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவரிடம் அதே குடியிருப்பில் வசித்து வந்த போலீசாரின் குடும்பத்தினர் ஏலச்சீட்டு கட்டியுள்ளனர். நரியங்காடு மட்டும் அல்லாமல் நம்பிக்கையின் பேரில் புதுப்பேட்டை, விழுப்புரம், சிதம்பரம், குன்றத்தூர், கும்மிடிப்பூண்டி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால், சீட்டு முதிர்வடைந்த பின்னரும், ராஜலட்சுமி சீட்டு பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சீட்டு மோசடி செய்த ராஜசேகர், ராஜலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீர் மல்க புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து தேர்தல் வேட்டை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்து ராஜலட்சுமியை நேற்று கைது செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.