விஷம் கலந்த மருந்தை குடித்து விட்டு கல்லூரிக்கு சென்ற மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர்
அம்பத்தூரை அடுத்த பாடி சீனிவாசா நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ராகுல் சந்திரன் (வயது 20). இவர் திருநின்றவூரில் உள்ள ஜெயா கல்லூரியில் பி.எஸ்.சி மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு சென்ற ராகுல் சந்திரன் பகல் 1 மணிக்கு கல்லூரியில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து சக மாணவர்கள் அவருக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்தனர். அப்போது வாந்தி எடுத்துள்ளார். அவரது நிலைமை மோசமானதால் இதுகுறித்து உடன் இருந்த மாணவர்கள் விசாரித்தனர்.
தற்கொலை
அப்போது ராகுல் சந்திரன் தான் விஷம் கலந்த மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து மாணவர்கள், ராகுல் சந்திரனை ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராகுல் சந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இது குறித்து திருநின்றவூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பீமன் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.