Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2016

திண்டுக்கல்லில் பரபரப்பு: விஷ ஊசி போட்டு டாக்டர், மகள் தற்கொலை?


திண்டுக்கல்லில் காருக்குள் டாக்டரும், அவரது மகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இருவரும் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து ெகாண்டனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.  திண்டுக்கல் ராணி மங்கம்மாள் காலனி நால்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நீண்ட நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள், அருகில் சென்று பார்த்தனர். உள்ளே 2 பேர், சீட்டில் தலை சரிந்த நிலையில் கிடந்தனர். அப்பகுதி மக்கள் திண்டுக்கல் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை திறந்து பார்த்தனர். உள்ளே ஒரு முதியவரும், இளம்பெண்ணும் மயங்கிய நிலையில் இருந்தனர். இருவரது  கையிலும் மருந்து ஏற்றும் ஊசி (சிரிஞ்ச்) இருந்தது. போலீசார் இருவரையும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விசாரணையில் காரில் இறந்து கிடந்தவர்கள், திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (60) மற்றும் அவரது மகள் வானதி (25) என்பது தெரிந்தது. சோமசுந்தரம் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் மயக்கவியல் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வானதி வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் கார்த்திக்கேயனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இருவரும் குடும்ப பிரச்னை காரணமாக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டனரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.