Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

சிஎஸ்கே-வின் மஞ்சள் நிற ஜெர்சி-க்காக மனம் உருகிய தோனி


9-வது ஐபிஎல் தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை அணியாமல் களத்தில் இறங்கும் போது மிகுந்த உணர்சிவயப்பட்டதாக தோனி தெரிவித்துள்ளார்.

சூதாட்ட விவகாரத்தில் சிக்கியதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளாயாடி ரசிகர்கள் மனதை கவர்ந்த தோனி இந்தாண்டு புனே அணியின் கேப்டனாக விளையாடுகிறார்.

புனே அணிக்கு தான் விளையாட போகிறேன் என தெரிந்திருந்தாலும், கடந்த 8 வருடங்களாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை அணியாமல் இந்த ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக களமிறங்கியது தன்னை உணர்ச்சிவசப் பட வைத்ததாக தோனி தெரிவித்தார்.

இருந்தபோதிலும் சென்னை அணிக்காக எப்படி ஆடினேனோ அதைப்போல் எந்தவித குறையும் இல்லாமல் புனே அணிக்கும் விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை புனே அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.