Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2016

ஓ.பி.எஸ். ஒரு யூ.பி.எஸ்... எப்படி தெரியுமா? -விளக்கும் பிரேமலதா!


முதல்வர் ஜெயலலிதா எப்ப எல்லாம் ஜெயிலுக்கு போறாங்களோ அப்ப எல்லாம் ஓ.பி.எஸ்.ஸுக்கு பவர் வரும். ஆதனால், அவர் ஒரு யூ.பி.எஸ். என்று பிரேமலதா விமர்சித்துள்ளார்.

தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் தே.மு.தி.க. மகளிர் அணித்தலைவி பிரேமலதா, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டர்.

அப்போது, ''ஓ.பி.எஸ். ஒரு யூ.பி.எஸ். ஜெயலலிதா எப்ப எல்லாம் ஜெயிலுக்கு போறாங்களோ அப்ப எல்லாம் அவருக்கு பவர் வரும். ஜெயிலுக்கு போகும்போதெல்லாம் முதல்வராகுபவர்தான் ஓ.பி.எஸ். ஆதனால் அவர் ஒரு யூ.பி.எஸ்.

அந்த அம்மா ஜெயிலில் இருந்து வெளியே வரும் வரைக்கும் அவர் தாடி வச்சுக்குவார், சோகமா மூஞ்சிய வச்சுக்குவாரு.கோயில் கோயிலா சுத்துவாரு. நடிகரைவிட சூப்பர் நடிகர் அவர். அவரை மிஞ்ச ஆளே இல்லை இப்ப தமிழ்நாட்டில். அந்தளவுக்கு அவர் ஒரு குணச்சித்திர நடிகர். அவங்க அம்மா வெளியில வந்ததும் திருப்பதி போய் மொட்டை போட்டுவிட்டு வந்து, அப்பா முடிஞ்சுதுடா சாமின்னு உட்கார்ந்துடுவார்.

தமிழ்நாட்டில் நடக்கிற மணல் கொள்ளைக்கு முக்கிய காரணம் யாரு? ஓ.பி.எஸ்.ஸும் அவங்க குடும்பத்தை சேர்ந்த கொள்ளையர்கள் தான். இதுல மாற்று கருத்தே இல்லை. அதனால, நாம போராடி சுதந்திரத்தை வாங்குனது பத்தாது. இந்த தேர்தலில் நீங்கள் நல்ல முடிவா எடுக்கனும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.