Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 29, 2016

பரிகார பூஜை செய்த ஓ.பி.எஸ். தம்பி!


 ராமேஸ்வரம் கோயிலில் பாப தீர்த்தங்களில் நீராடி, சிறப்பு பூஜைகள் செய்தார் தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர்  ஓ.ராஜா.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முதல் குற்றவாளியாக  ஓ.ராஜா சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு நியாயமாக நடக்க வேண்டும் என்று நாகமுத்துவின் பெற்றோர் கோரிக்கை வைத்ததால், வழக்கு தேனி மாவட்டத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டது.



மந்தமாக நடந்து வந்த அந்த வழக்கில், அரசின் சிறப்பு வழக்கறிஞராக மோகன் வந்தபின் வழக்கு வேகமெடுத்துள்ளது. அதே சமயம், ஆரம்பத்தில் வழக்கு பதிய தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகளையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று நாகமுத்து பெற்றோர் தரப்பு போட்ட மனு, சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.



ஆனாலும், இந்த வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராக வந்துவிடும் என்று அச்சப்படும் ஓ.ராஜா, வழக்கிலிருந்து விடுபட நேற்று இரவு ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, பாவம் தீர்க்க தீர்த்தங்களில் நீராடினார். கட்சி முக்கிய புள்ளிகள் யாரும் இவர் வருகையை கண்டு கொள்ளவே இல்லை.

இதற்கு முன் பல முக்கிய புள்ளிகள், வழக்கில் இருந்த விடுபட ராமேஸ்வரம் வந்து பூஜை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.