Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 8, 2016

வெங்காய ரசம்


தேவையான பொருட்கள்: எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் பூண்டு - 5 பற்கள் (தட்டியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) ரசப்பொடி - 1 டேபிள் ஸ்பூன் புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது 

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெங்காயம், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

 பின்பு அதில் புளிச்சாறு, ரசப்பொடி, உப்பு, சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். ரசம் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், வெங்காய ரசம் ரெடி!!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.