Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: 'ஒபாமாவின் கருத்து கிளிப் பிள்ளை பேச்சு'


ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விதத்தில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் விளைவுகள் பற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கைகளை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பிரசாரம் செய்துவரும் அரசியல்வாதிகள் நிராகரித்துள்ளனர்.
பிரிட்டன் வெளியேறினால், தனிமைப்படுத்தப்படும் என்றும் வணிக உறவுகள் பாதிக்கப்படும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கூறுவதையே 'கிளிப் பிள்ளை பேச்சாக' ஒபாமா ஒப்புவிப்பதாக யூகிப் என்ற ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜ் கூறியுள்ளார்.


பிரிட்டிஷ் பிரதமரை ஆதரிப்பதற்காக உலகத் தலைவர்கள் 'அணி சேர்கின்றனர்' என்று ஃபராஜ் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் மக்கள் வெளியாரிடமிருந்து வரும் செய்திகளை பெரும்பாலும் உள்வாங்க மாட்டார்கள் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லியாம் ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.
'பிரிட்டன் வெளியேற வேண்டும்' என்ற பிரசாரத் திட்டத்தின் இணைத் தலைவரான தொழிற்கட்சி எம்.பி. கிஸேலா ஸ்டுவர்ட், 'ஒபாமாவின் கருத்து தவறு' என்றும் பிரிட்டனை 'சங்கிலியால் பிணைத்திருக்கும் இயக்கமற்ற அமைப்பு தான்' ஐரோப்பிய ஒன்றியம் என்றும் விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.