காட்டுயிர்களை காப்பதற்கான அமைப்புகளின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, கடந்த நூற்றாண்டுகளில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 1990-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புலிகள் இருந்தன. ஆனால் அதன்பின் எடுக்கப்பட்ட அனைத்து கணக்கெடுப்புகளிலும் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, கடந்த 2010 -ம் ஆண்டின்படி வெறும் 3200 என்ற எண்ணிக்கையில் முடிந்தது. ஆனால் அதன்பின் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தற்பொழுது உலகில் 3, 890 புலிகள் இருப்பதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கை உயர்வு மேம்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு முறைகளாலும், அதிகமான பரப்பளவை உள்ளடக்கியதாலும்தான் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தும் உள்ளது. எனினும் உலகளாவிய இயற்கை நிதியத்தின் காட்டுயிர் காக்கும் அமைப்பின் முதன்மை துணைத் தலைவரான கினேட்டே ஹெம்லே (Ginette Hemley) கூறுகையில், " நாம் கருத்தில் கொள்ள வேண்டியது மிகச்சரியான எண்ணிக்கையை அன்று, அதைவிட முக்கியமான ஒன்றான எண்ணிக்கையில் உள்ள நேர்மறையான போக்கே" என்றார்.
2010 -ம் ஆண்டின் புலிகளின் எண்ணிக்கையை 2022 -ம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்குவது தொடர்பாக விவாதிப்பது குறித்து, நாளை டெல்லியில் 13 நாட்டு அமைச்சர்கள் கூடவுள்ள நிலையில், இவ்வெளியீடு இன்று வந்துள்ளது நல்ல செய்தி.
இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் முன்னேற்றம் இருந்தாலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் முறையான கணக்கெடுப்போ பாதுகாப்பு நடவடிக்கைகளோ இல்லாமையால், அவை பின்தங்கியே உள்ளன. கம்போடியாவில் ஒரு புலி கூட இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டநிலையில், இந்தோனேசியாவில் வாழ்விட அழிப்பின் காரணமாய் புலிகளின் எண்ணிக்கையில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை சார்ந்தது ஆகும்.
இவ்வாண்டின் கணக்கின்படி இந்தியாவில் மட்டும் 2226 புலிகள் உள்ளன. அதாவது உலக அளவில் இருக்கும் மொத்த புலிகள் எண்ணிக்கையில் பாதி. 2010 ல் மியான்மரில் இருந்த 85 புலிகள், 2014 ல் கணக்கிடப்படாததால் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க தேவையான அளவு காட்டுப் பரப்பளவும் உலகில் உள்ளது என்று ஓர் சமீபத்திய ஆய்வு கூறுவது போனஸ் நற்செய்தி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.