Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2016

டுவிட்டரில் ஆவேசம்: விளம்பர தூதர் பணியிலிருந்து தோனி விலகல்


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தான் வகித்து வந்த அமரபள்ளி நிறுவனத்திற்கான விளம்பரத் தூதர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். டிடுவிட்ரில் அந்த நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் தோனி தானாகவே இந்த முடிவை எடுத்துள்ளார்.

கடந்த ஆறு முதல் 7 வருடங்களாக தோனி கட்டுமான நிறுவனமாக அமரபள்ளிக்கு விளம்பர தூதராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நொய்டா நகரத்தில் அமரபள்ளி நிறுவனத்தின் சபையர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் ஆத்திரம் அடைந்த கட்டட வாசிகள் டுவிட்டர் மூலம் அதன் விளம்பரத் தூதரான தோனியை தொடர்பு கொண்டனர்.

இதுகுறித்து கட்டட வாசிகள் பதிவிட்டுள்ள டுவிட்டில், தயவு செய்து கட்டட பணிகளை விரைந்து முடிக்குமாறு அமரபள்ளி நிறுவனத்தை தோனி நிர்பந்திக்குமாறும் இல்லையெனில் அந்த நிறுவத்திற்காக வகித்து வரும் விளம்பர தூதர் பணியில் இருந்து விலகுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இந்த டுவிட்டை சீரியஸ் விஷயமாக எடுத்துக்கொண்டு தோனி, கொதிப்படைந்த மக்களின் பிரச்னைக்காக அமரபள்ளி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று அந்நிறுவனத்திற்காக தாம் வகித்து வந்த பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமரபள்ளி நிறுவனம், தங்களுது வேலையில் ஏற்பட்ட தாமதத்தால் தோனியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதை விரும்பவில்லை எனவும் ராஜினாமா செய்தது தோனியும் தாங்களும் இணைந்து எடுத்த முடிவுதான் எனவும் கூறியுள்ளது. மேலும் கட்டட வாசிகளின் குறைகளை களைய ஒரு குழு அமைத்துள்ளதாகவும் அமரபள்ளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.