பள்ளத்தூர் என்ற ஊரில் திவாகர் என்பவன் இருந்தான். அவன் மனைவி சொல்லுக்கு மறு பேச்சு பேச மாட்டான்.
அவன் மனைவி எப்போதும் மாமியாருடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள். இதனால், மாமியாரைத் தொலைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள் அவள்.
""உங்கம்மா தொல்லை தாங்க முடிய வில்லை. அவள் செத்தால்தான் நாம் மகிழ்ச்சி யாக இருக்க முடியும்,'' என்று புலம்பினாள்.
அப்போதும் கூட அவளை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான் திவாகர்.
""என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?'' என்று கேட்டான் திவாகர்.
""நாளை உங்கள் அம்மாவை அழைத்துக் கொண்டு காட்டிற்குச் செல்லுங் கள். நடுக்காட்டில் அவளை விட்டுவிட்டு வந்து விடுங்கள். கொடிய விலங்கு கள் அவளைக் கொன்றுவிடும். நம் மேல் எந்தப் பழியும் வராது,'' என்றாள் அவள்.
""அப்படியே செய்கிறேன்,'' என்றான் சிறிது கூட மனசாட்சி இல்லாமல்.
மறுநாள் பொழுது விடிந்தது-
அம்மாவிடம் அவன், ""நாம் வெளியூர் சென்றுவிட்டு வரலாம். உனக்கும் ஒரு மாற்றமாக இருக்கும்,'' என்றான்.
அவன் தாயார் மிகவும் அப்பாவி. மகனை மிகவும் நேசித்தாள். அவனுடன் உடனே புறப்பட்டாள்.
மனைவி அவனுக்குப் பால் சோறும், மாமியாருக்குக் களிமண் சோறும் வைத்திருந்தாள்.
இருவரிடமும் சோற்று மூட்டையைத் தந்தாள்.
""பால் சோறு உள்ளது. சாப்பிடுங்கள்,'' என்றாள்.
அம்மாவை அழைத்துக் கொண்டு காட்டில் நெடுந்தொலைவு சென்றான் அவன். இனி அவளால் வழி கண்டுபிடித்து வீடு திரும்ப முடியாது என்று நினைத்தான்.
""அம்மா! களைப்பாக உள்ளது. இந்த மரத்தில் நிழலில் படுத்துத் தூங்குவோம்,'' என்றான்.
இருவரும் அங்கே படுத்தனர்.
அம்மா தூங்கி விட்டதை அறிந்த அவன் மெல்ல எழுந்தான். தவறுதலாக அம்மாவின் கட்டுச் சோற்று மூட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
சிறிது நேரம் சென்று விழித்தாள் அவள். மகனைக் காணாது திகைத்தாள்.
""நடுக்காட்டில் தவிக்கிறேனே... என்ன செய்வேன்...'' என்று அழுது புலம்பினாள்.
அவள் அழுகுரலைக் கேட்டு ஒரு தேவதை அங்கே வந்தாள்.
""பாட்டி! ஏன் அழுகிறாய்?'' என்று அன்புடன் கேட்டாள்.
""நானும் என் மகனும் வந்தோம். மகனைக் காணவில்லை. நடுக் காட்டில் தவிக்கிறேனே,'' என்றாள்.
அப்போது கூட அவளால் தன் மகன் தன்னை விட்டு, விட்டு போயிருப்பான் என்பதை நம்ப முடியவில்லை.
அங்கே இருந்த மூட்டையைப் பார்த்த தேவதை, ""பாட்டி! அது என்ன மூட்டை?'' என்று கேட்டாள்.
""அதில் பால் சோறு உள்ளது. நாம் இருவரும் சாப்பிடலாம்?'' என்றாள் அவள்.
மூட்டையில் இருந்த பால் சோற்றை இருவரும் சாப்பிட்டனர்.
மகிழ்ந்த தேவதை அவளை இளம் பெண்ணாக மாற்றினாள். பட்டாடைகளையும் விலை உயர்ந்த நகைகளையும் தந்தாள்.
அவற்றை அணிந்து கொண்ட அவன் வீட்டிற்கு வந்தாள்.
விலை உயர்ந்த நகைகளுடன் இளமையாக அம்மா வந்ததைப் பார்த்த திவாகர் திடுக் கிட்டான்.
""அம்மா! இளமையும், இவ்வளவு செல்வமும் உனக்கு எப்படிக் கிடைத்தது?'' என்று ஆர்வத்துடன் கேட்டான்.
நடந்ததை எல்லாம் சொன்னாள் அவள்.
அங்கிருந்த அவன் மனைவி அதைக் கேட்டு பொறாமையால் துடித்தாள்.
மாமியாரைப் போலத் தன் அம்மாவும் இளம் பெண்ணாக வேண்டும். நிறைய செல்வத் துடன் வர வேண்டும் என்று நினைத்தாள்.
அம்மாவை அங்கே வரவழைத்தாள்.
களிமண் சோற்று மூட்டையை அம்மாவிடம் தந்தாள். பால் சோற்று மூட்டையைக் கணவனிடம் தந்தாள்.
""உங்கம்மாவைக் காட்டில் எங்கே விட்டீர்களோ அங்கேயே என் அம்மாவையும் விடுங்கள். அருகில் ஒளிந்து இருந்து என்ன நடக்கிறது என்று பாருங்கள். தேவதையின் அருள் பெற்றதும், என் அம்மாவை அழைத்து வாருங்கள்,'' என்றாள்.
""அப்படியே செய்கிறேன்,'' என்ற அவன் மாமியாருடன் புறப்பட்டான்.
அதே மரத்தின் நிழலில் அவளைப் படுக்க வைத்தான்.
பால் சோற்று மூட்டையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த புதரில் ஒளிந்து கொண்டான்.
அங்கே என்ன நடக்கிறது என்று கவனித்தான் திவாகர்.
மகள் சொன்னது போல அவள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.
அங்கே வந்த தேவதை அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.
""மூட்டைக்குள் என்ன உள்ளது?'' என்று கேட்டாள்.
""பால் சோறு உள்ளது. இருவரும் சாப்பிடு வோம். சாப்பிட்டு முடித்ததும் எனக்குப் பட்டாடையும் நகைகளும் தர வேண்டும். நேற்று அவளுக்குத் தந்ததை விட அதிகம் தர வேண்டும்,'' என்று அவள் மூட்டையைப் பிரித்தாள்.
உள்ளே களிமண் இருந்தது.
கோபம் கொண்ட தேவதை, ""என்னை ஏமாற்றக் களிமண்ணுடன் வந்திருக்கிறாயா? நீ வீடு போய்ச் சேர்வதற்குள் கழுதையாகி விடு வாய்,'' என்று சாபம் தந்துவிட்டு மறைந்தாள்.
"இப்படிச் சாபம் பெற்று விட்டேனே...' என்று வருந்தினாள் அவள். மகள் வீட்டை நோக்கி நடந்தாள்.
நடந்ததை எல்லாம் பார்த்த திவாகர் திகைத்தான். அவளைப் பின்தொடர்ந்தான்.
அவள் கால்களிலும், கைகளிலும் கழுதை களுக்கு இருப்பது போலக் குளம்பு உண்டா யிற்று. அவள் வடிவமும் கழுதையாகிக் கொண்டே வந்தது.
வீட்டை நெருங்கியதும் அவள் முழுக் கழுதையாக ஆனாள்.
வீட்டின் முன் நின்று, ""காள்! காள்!'' என்று கத்தினாள்.
குரல் கேட்டு வெளியே வந்தாள் மகள். கழுதை ஒன்று கத்துவதை பார்த்துத் திகைத் தாள்.
அங்கே வந்த கணவனிடம், ""எங்கம்மா எங்கே? இந்தக் கழுதை ஏன் நம் வீட்டின் முன் கத்துகிறது?'' என்று கேட்டான்.
""வர வர மாமியார் கழுதை போல ஆனாள். இந்தக் கழுதைதான் உன் அம்மா,'' என்றான் அவன்.
அதிர்ச்சி அடைந்த அவள், ""என்னங்க சொல்றீங்க?'' என்று அலறினாள்.
நடந்தை எல்லாம் சொன்னான் திவாகர்.
"தன் பேராசையால், அம்மா இப்படி கழுதை யாகி விட்டாளே...' என்று அழுது புலம்பினாள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.