Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 29, 2016

கூட்டணி ஆட்சி, முழு மதுவிலக்கு:மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி!


மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் அறிக்கை சென்னையில் இன்று வெளியிடப்பட்டது.

சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டனர்.      

தேர்தல் அறிக்கையின்  சிறப்பு அம்சங்கள்:

1. கூட்டணி ஆட்சி
2.ஆட்சியில் நெறிமுறை குழு அமைப்பு
3.மக்கள் பங்கேற்கும் தணிக்கை குழு
4.லோக் ஆயுக்தா சட்டம் அமல்
5.நேர்மையான ஆட்சி
6.முழு மதுவிலக்கு
7.வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்படும்
8.கடன்கள் முழுவதும் ரத்து
9.சிறு தொழில் பாதுகாப்பு
10.தொடக்கக் கல்வி முதல் இலவச கல்வி
11.மாணவர்களின் கடன் தள்ளுபடி
12.பால் விலை உயர்வு பஸ் கட்டண உயர்வு ரத்து
13.மாணவர்களுக்கான தனி பேருந்துகள்
14.இலவசமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
15.மீனவர் நலன் பாதுகாக்கப்படும்
16.வணிகர்களுக்கு ஒற்றை சாளர முறைப்படி எளிமையான முறையில் உரிமம்
17.இஸ்லாமிய கைதிகள் விடுதலை முயற்சிக்கப்படும்
18.மத வன்முறைகள் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்     

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.