Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2016

ஆட்சிக்கு வந்ததும் இதையெல்லாம் செய்வாராம் ஸ்டாலின்!


திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக் கடன், விவசாயக் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று மதுரை பிரசாரத்தின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் வரும் 22 ம் தேதி வரை தேர்தல் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் மு.க.ஸ்டாலின். அதன்படி இன்று மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் திமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், "திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதுடன், லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும். மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். விவசாய கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்த அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் கட்டணம் மாதந்தோறும் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்"  என்று உறுதி அளித்து பேசினார்.

நாளை தேனி, திண்டுக்கல் (பொதுக்கூட்டம்-தேனி), 17ம் தேதி திருப்பூர், 18ம் தேதி-கரூர், திருச்சி (பொதுக்கூட்டம்-குளித்தலை), 19ம்  தேதி பெரம்பலூர், அரியலூர், கடலூர் (பொதுக்கூட்டம்-குன்னம்), 20ம் தேதி- விழுப்புரம், 22ம் தேதி- காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.